Mareesan: மாரீசன் படத்துல பிளஸ், மைனஸ் இதுதான்...! நடிப்புல பகத்பாசிலா, வடிவேலா யாரு கெத்து?
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மாரீசன் படம் இன்று வெளியானது. பகத்பாசில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா...
படத்துல பகத்பாசில் திருடனா வர்றாரு. பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுறாரு. வெளியே வந்ததுமே தொழிலை ஆரம்பிச்சிடுவோம்னு ஒரு வீடு ஏறி குதிக்கிறாரு. அங்கே வடிவேலுவை விலங்கு போட்டு வச்சிருக்காங்க. 25 ஆயிரம் ரூபா தர்றேன். என்னை ரிலீஸ் பண்ணுப்பான்னு கேட்குறாரு. வடிவேலுவைக் காப்பாத்துறாரு.
ஏடிஎம்ல போய் 25 ஆயிரம் ரூபாவை வடிவேலு எடுக்கப் போறாரு. அப்போ தான் அவருக்கிட்ட 25 லட்சம் பேங்க் பேலன்ஸ் இருக்குறது தெரியுது. எப்படியாவது இதை உஷார் பண்ணிடனும்னு பகத்பாசில் பிளான் போடுறாரு. வடிவேலுவுக்கு வேற ஞாபக மறதி நோய். அதைப் பயன்படுத்தி ஒரு பிரயாணம் போறாரு. அப்புறம் என்ன நடந்ததுங்கறதுதான் கதை.
வடிவேலு காமெடியா நடிக்கிறதனால நமக்கு அவரோட குணச்சித்திர நடிப்பு தெரியாமல் போய்விட்டது. மாமன்னனுக்குப் பிறகு மாரீசனில் கெத்துக் காட்டி இருக்கிறார் வடிவேலு. அவர் பகத்பாசிலுக்கே டஃப் கொடுக்குற மாதிரி நடித்துள்ளார். அதனால வடிவேலு படத்துக்கு ஒரு பிளஸ். பகத்பாசிலைப் பொருத்தவரை அவரது கண்ணே பேசும்.
படத்துல வர்ற ஒரு சூப்பர் சீன் இது. பகத்பாசில் சின்ன வயசுல நான் கோவிலுக்குப் போய் கடவுள்கிட்ட ஷூ வேணும்னு கேட்டேன். கிடைக்கவே இல்லை. அப்புறம்தான் தெரிஞ்சது நமக்கு எது தேவையோ அதை எடுத்துக்கிட்டு கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டா கொடுத்துடுவாருன்னு. அப்படி பகத்பாசில் சொன்னதும், அதைக் கேட்ட வடிவேலு ஓகோ அதான் கோவிலுக்கு கூட்டமா வருதான்னு அப்பாவியாய் கேட்பார். அந்த பர்ஃபார்மன்ஸ், டயலாக் டெலிவரி அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.
படம் ரொம்ப ஸ்லோவா போகுது. மெய்யழகன் ஸ்லோ தான். ஆனா என்கேஜிங்கா இருக்கும். இதுல அது மிஸ்ஸிங். இந்தப் படம் எங்கேயோ டிப்பாகி ஸ்லோவா போய்க்கிட்டே இருந்தது. இந்தப் படத்துல இன்டர்வல் கிட்ட ஒரு டுவிஸ்ட் வச்சிருக்காங்க. அதை கிளைமேக்ஸ்க்கு முன்னாடி காட்டிருக்கலாம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். மியூசிக் சூப்பர். பகத்பாசில், வடிவேலு நடிப்பைப் பார்த்து ரசிக்கணும்னா இந்தப் படத்துக்குப் போகலாம்.