எம்ஜிஆருக்குப் போட்டியா வந்தாரா மு.க.முத்து? பிரபலம் சொல்லும் பதில் என்ன?
மறைந்த நடிகர் மு.க. முத்து பற்றி ஒரு செய்தி உண்டு. அவர் எம்ஜிஆர் மாதிரி சினிமாவில் நடிக்கிறார். அவருக்குப் போட்டியா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்ன சொல்கிறார்? வாங்க பார்க்கலாம்.
எம்ஜிஆருக்குப் போட்டியா முக.முத்துன்னு எல்லாம் எடுத்துக்கக்கூடாது. ஏன்னா எம்ஜிஆர் கொடுத்த வெற்றியும்இ கடந்து வந்த பாதைகளும், அவர் நடித்த படங்களும் அதுக்கான வசூலும் வேற. ஆனா அரசியலுக்கு ஒரு காய் நகர்த்த வேண்டும் என்ற சிந்தனையோட முக.முத்துவை சிலர் நகர்த்திக் கொண்டு வச்சிருப்பாங்கன்னு வேணா பார்த்துக்கலாம்.
ஆனா எம்ஜிஆர் அதை எப்படி எடுத்துக்கிட்டாருன்னுதான் பார்க்கணும். எம்ஜிஆர் தன்னோட படங்களுக்குப் பெரிய பலமாக நினைச்சது பாடல்களைத் தான். பாடல்கள் என்ன செய்யும்னா பெரிய லெக்சர் நடத்தி கூட்டத்தை நடத்தி சொல்லக்கூடிய விஷயத்தை ரீச் பண்ண முடியாமப் போகும்போது ஒரு 3 நிமிட பாடல் வந்து சொல்லிடும்.
அது கடைக்கோடியில இருக்குற ரசிகர்களுக்கும் போய்ச் சேரும். அதனால பாட்டை வந்து எம்ஜிஆர் தனக்கான பெரிய ஆயுதமாகவே வச்சிக்கிட்டாரு. அதனால தான் ஒவ்வொரு படத்துக்கும் பாடல்கள் எப்படி வரணும்கறதை அவரே வடிவமைச்சாரு. இதயவீணை படத்துக்கு 5 டியூன்ல இருந்து ஒவ்வொரு இசைக்கண்ணிகளாக எடுத்து ஒரே பாட்டா வச்சாரு.
எம்ஜிஆர் பாடலைத் தன்னோட ஆயுதமா நினைச்சாலும் அவரால பாட முடியாது. ஆனா மு.க.முத்துவால் நல்லா பாட முடியும். அருமையான குரல் வளம் உள்ளவர். எம்ஜிஆர் படத்துக்கு உள்ள மாதிரி மு.க.முத்துவுக்கும் பெரிய டீம் இருக்கு. எம்ஜிஆர் என்ன சொல்றாருன்னா உன் படத்தை எல்லாம் எனக்குப் போட்டுக் காட்ட மாட்டியான்னு ஒரு தடவை கேட்டுள்ளார்.
அதற்கு உடனே மு.க.முத்து தன்னோட டீமை அழைச்சி வந்து எம்ஜிஆருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினாராம். அப்போது எம்ஜிஆர் அவரிடம், உனக்கென ஒரு தனிபாணியை அமைச்சிக்கிட்டு முன்னுக்கு வரணும்னு சொல்றாரு. அதே நேரம் அவரு கையில கட்டி இருந்த ரேடோ வாட்சைக் கழட்டி அவருக்கு கட்டி வாழ்த்திருக்காரு எம்ஜிஆர். பிள்ளையோ பிள்ளை படத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற பாடலில் மு.க. முத்துவின் டிரஸ், கெட்டப் போட்டு ஆடுவது எல்லாம் அப்படியே எம்ஜிஆரைப் பார்த்த மாதிரி இருக்கு.
எம்ஜிஆர் மாதிரியே ஓடுவார். கிருஷ்ணன் பஞ்சுவில் இருந்து எல்லாரும் இவரை எப்படியாவது முன்னாடி கொண்டு வரணும்னு உழைக்கிறாங்க. எம்ஜிஆர் முக.முத்துவின் பாடல்களை எல்லாம் கேட்டு ஷாக் ஆகிட்டாரு. முக.முத்துவுக்கு எழுதப்பட்ட பாடல்கள் எல்லாமே எம்ஜிஆரை நோக்கித்தான் எழுதப்பட்டன. எம்ஜிஆருக்கு நட்பில் நெருக்கமாக இருந்த வாலி தான் மு.க.முத்துவுக்கும் பாடல்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.