எனக்கு அது பெரிய வரம்... விஜய் சேதுபதி எதைச் சொல்றாருன்னு பாருங்க!
தமிழ்த்திரை உலகில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். பிக்பாஸ் வரை வந்து பர்பார்மன்ஸ் காட்டி விட்டார். இப்போது தனது திரையுலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். அவற்றில் இருந்து ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.
விஜய்சேதுபதியிடம் உங்களை நல்ல நடிகனா ஆக்குனதுல யார் யாருக்கு முக்கியமான பங்கு இருக்குன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்கிறார். அதற்கு மக்கள் செல்வன் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.
நிறைய பேர் இருக்காங்க. முக்கியமான பங்குன்னா மணிகண்டன், சீனுசார், ஜனா, குமாரராஜா, வெற்றி, கோகுல் சார், பாலாஜின்னு நிறைய பேரைச் சொல்லலாம். இன்னும் வாய்ப்பு தேடும்போது நிறைய அசிஸ்டண்ட் டைரக்டரை சொல்லலாம். சிஜே.பாஸ்கரை சொல்லலாம். சீரியல்ல வாய்ப்பு கொடுத்தது அவருதான்.
யாருமே நம்பாத போது எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு. உன் கண்ணும், சிரிப்பும் நல்லாருக்குடா. உணர்ந்து நடிச்சா ஒரு நாள் நீ பெரிய ஆளா ஆகிடுவேன்னு சொன்னாரு. எனக்கு அது பெரிய வரமாகத் தான் இருந்தது. சீரியல்ல எல்லாரும் நல்லா நடிச்சிட்டு இருப்பாங்க. உனக்கு ரியாக்ஷன்னா என்னன்னு தெரியல. நடிச்சிட்டு இருப்பாங்க. அவங்க நடிக்கிறதைப் பாருன்னு சொல்வாரு.
சூட்டிங் தள்ளித் தள்ளி வருவதால உனக்கு அப்படி இருக்கு. இல்ல கதையை உன் மேல திருப்புறேன்னு சொன்னாரு. அப்படி திருப்புனதும் ஒரு வாரம் என்னை நிறைய பாதிச்சது. கூத்துப்பட்டறையில பார்த்துப் புரிஞ்சிக்கிட்டதை 8 மாத சீரியல் வந்து பெரிய பிராக்டிஸா இருந்தது. இது மாதிரி நிறைய பேரு இருக்காங்க. சின்னச் சின்ன வேலையை எல்லாம் செஞ்சிட்டு இருப்பாங்க.
எனக்கு அந்த கீவேர்ட்ஸ் எல்லாம் ஸ்டோர் ஆகிடும். அது மாதிரி யாராவது டயலாக் பேசினா அதையே ஸ்டடி பண்ணிக்கிட்டு இருப்பேன் என்கிறார் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி அருமையாக நடித்து இருந்தார். கதாநாயகியாக நயன்தாரா சூப்பராக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும் போது விக்னேஷ் சிவன் சார் கதை சொல்லும்போதே அருமையா இருக்கும். அவ்ளோ அழகா சொல்வாரு. அந்தப் படத்துல தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன். ஏன்னா அந்தக் கேரக்டர் அப்படிப்பட்டது. ஒரு வாரம் ஆச்சு. அதைப் புரிஞ்சிக்கிட்டு நடிக்கிறதுக்கு. எமோஷனல், ஹியூமர்னு மாறி மாறி வரும். என்கிறார் விஜய் சேதுபதி.