விஜய் போட்ட ஸ்கெட்ச்.... கூலிக்கு ஜனநாயகனை விட பிசினஸ் கம்மியா?
கூலி படத்தோட பிசினஸ் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் பிசினஸ்சை முறியடிக்கலன்னு சொல்றாங்க. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. வரும் ஆகஸ்டு 14ல் ரிலீஸ் ஆகிறது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் இந்தப் படம் குறித்தும், விஜயின் ஜனநாயகன் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
கூலி படத்தைப் பொருத்தவரைக்கும் இதுவரை இல்லாத பிசினஸை பண்ணிருக்காங்க. ஜனநாயகன் இன்னும் பண்ணல. ஓடிடி வரைக்கும் தான் பண்ணிருக்காங்க. டிஜிட்டல் மட்டும் பண்ணிருக்காங்க. அதுக்கு ஒரு ஸ்கேல் வச்சிட்டாங்க. ரஜினிக்கும், விஜய்க்கும் ஒரே அளவு. அதனால அங்கே போட்டி கிடையாது. ஆனா அடுத்தடுத்த பிசினஸை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
விஜய் இப்ப வேணாம். ஆகஸ்டுக்கு மேல வச்சிக்கலாம்னு சொல்லிட்டாரு. எதுக்குன்னா கூலி ஆகஸ்டுல ரிலீஸ் ஆகிடும். தேவையில்லாம இந்த ஒப்பீடுகள் தவிர்க்கப்படும். விஜய்க்கு ரஜினி ரசிகர்களோட தயவு தேவைப்படுது. விரைவில் எலெக்ஷன் நெருங்கிக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல விஜய் பெரிசா, ரஜினி பெரிசான்னு போட்டியே வர வேணாம் அப்படின்னு விஜய் நினைக்கிறாரு.
லோகேஷ் கனகராஜ் சக நடிகர்களை மதிக்கிற விதத்தில் லோகேஷ் கனகராஜிக்கு நல்ல பேரு இருக்கு. அஜித்துக்குப் போன் பண்ணி நல்ல கதை இருக்குன்னு சொன்னா முதல்ல கிளம்பி வாங்க சார்னுதான் சொல்வாங்க. தமிழ்நாட்டுல இருக்குற கலெக்ஷனை மட்டும் நம்பி பெரிய படத்தை எடுத்துற முடியாது. அதுதான் குட் பேட் அக்லிக்குக் கிடைச்ச தோல்வி என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
கூலி படத்துக்கு இதுவரை 2 சிங்கிள் வெளியாகி விட்டது. சிக்கிடு சிக்கிடு, மோனிகா, பவர் ஹவுஸ் ஆகிய பாடல்கள் வெளியாகி தெறிக்க விடுகின்றன. ஆகஸ்டு 2ல் டிரைலர் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.