சிங்கப்பெண்ணே: சுயம்புவிடம் இருந்து ஆனந்தியைக் காப்பாற்றிய அன்பு? கல்யாணம் நடக்குமா?
சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் பரபரப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. கோகிலாவின் கல்யாணம் முடிவதற்குள் போதும் போதும் என்ற மாதிரி தான் தொடர் போகிறது. ஏன்டா ஆனந்திக்கு மட்டும் இவ்ளோ சோதனைங்கற மாதிரி தான் தொடர் ஆரம்பத்துல இருந்தே போகுது. ஆனா அத்தனை தடைகளையும் அவள் தன்னம்பிக்கையால் தகர்த்து எறிகிறாள் என்பது மட்டும் புரிகிறது.
தன் அக்காவோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்பதற்காக எவ்வளவோ மெனக்கிடுகிறாள் ஆனந்தி. ஆனாலும் ஒவ்வொரு தொடரிலும் டுவிஸட் வந்து கொண்டே இருக்கிறது. கல்யாண வீட்டில் மணப்பெண் கோகிலாவையே சுயம்பு கடத்தி விடுகிறான். விடிஞ்சா கல்யாணம். ஆனந்தி அக்காவைக் காணாமல் பரபரக்கிறாள். சுயம்பு நீ வந்தால் தான் உங்க அக்காவை விடுவேன் என்கிறான். வேறு வழி இல்லாததால் தன்னையே தியாகம் பண்ண கிளம்புகிறாள் ஆனந்தி.
எனக்கு யார் துணையும் தேவையில்லை. என் உசுரைக் கொடுத்தாவது என் அக்கா கல்யாணத்தை நடத்திக் காட்டுவேன் என்கிறாள் ஆனந்தி. சேகர் கோகிலாவின் கழுத்தில் தாலியைக் கட்ட முயற்சிக்கிறான். உடனே ஆனந்தி சுயம்பு சொன்னபடி கேட்டு தாலி கட்ட சம்மதிக்கிறாள். அவனது அல்லக்கை கோட்டைச்சாமி டான்ஸ் ஆடுகிறான்.
ஆனந்தி வந்தா விட்டுருவியா அண்ணேன்னு கேட்கிறான் சேகர். அதெப்படிடா விடுவேன். ஆனந்தி வருவதற்குத் தான் அப்படி சொன்னேன். இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு சுயம்பு சேகரிடம் சொல்ல அவன் குஷியாகிறான். அங்கு கோகிலாவைக் கட்ட சேகரும், ஆனந்தியைக் கட்ட சுயம்புவும் தாலியுடன் ரெடியாக இருக்கிறார்கள். ஆனந்தியைத் தேடி அவளது அம்மா அவளது அறைக்கதவைத் தட்டுகிறாள். ரெஜினாவும், சௌந்தர்யாவும் ஏதோ சொல்லி சமாளிக்கிறார்கள்.
ஆனந்தியின் கழுத்தில் சுயம்பு தாலி கட்டப்போகும் சமயம் அன்பு வந்து விடுகிறான். சுயம்புவையும் அவனது அடியாள்களையும் உதைத்து துவைத்துவிட்டு ஆனந்தியையும், கோகிலாவையும் மீட்கிறான். அதே வேளையில் மறுபடியும் அவன் வந்து பிரச்சனை செய்வானோ என குழப்பத்துடன் நிற்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.