Singappenne: கடத்தப்பட்ட கோகிலாவை மீட்க... ஆனந்தி செய்யத் துணிந்த அந்த காரியம்..!

By :  SANKARAN
Published On 2025-07-23 21:57 IST   |   Updated On 2025-07-23 22:06:00 IST

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஆனந்தியின் அக்கா கோகிலாவை சுயம்பு கடத்திச் சென்று அவனது அறையில் அடைக்கிறான். நள்ளிரவில் வீட்டில் கோகிலாவைக் காணாமல் ஆனந்தி திகைக்கிறாள். மாப்பிள்ளை ரூமுக்கும், அம்மாவின் ரூமுக்கும் போய் தேடிப் பார்க்கிறாள். கிடைக்கவில்லை. அவர்கள் என்னன்னு கேட்கையில் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். அவசரம் அவசரமாக அறைக்கு வந்து அக்காவுக்கு போன் பண்ணுகிறாள். ஆனால் அங்கு போன் ரிங் போகிறது. யாரும் எடுக்கவில்லை.

அப்புறம் சுயம்பு அக்காவின் நம்பரில் இருந்து கால் பண்ணுகிறான். ஆனந்தி எடுக்கிறாள். சுயம்பு கடத்தி வைத்துக் கொண்டு கோகிலாவுக்கு சேகர் தான் மாப்பிள்ளை என்கிறான். எனக்கு நீதான் பொண்ணு. நாளைக்கு ஊரறிய உங்க அக்காவுக்குக் கல்யாணம் நடக்கணும்னா நான் உன்னைக் கட்டிக்க சம்மதிக்கணும்.

இல்லன்னா சேகர் உங்க அக்காவைக் கல்யாணம் செய்வான் என்று மிரட்டுகிறான். விடிஞ்சா கல்யாணம். ஆனா இப்படி ஒரு நிலைமையான்னு ஆனந்தி பரிதவிக்கிறாள். சுயம்புவிடம் நீ என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா அக்கா பாவம். அவளை ஒண்ணும் பண்ணிடாதேன்னு அலறுகிறாள் ஆனந்தி.

உன் அக்கா அங்கே வரணும்னா நீ இங்கே வரணும்னு சொல்கிறான் சுயம்பு. நீ இங்க வந்த 10வது நிமிஷத்துல உங்க அக்கா அங்கே இருப்பான்னு சொல்கிறான் சுயம்பு. நைட் பூராவும் என் கூட தான் உங்க அக்கா இருந்தான்னு ஊருக்குத் தெரிஞ்சா உங்க அக்கா கல்யாணம் நடக்குமா? உங்க அப்பா, அம்மா மண்டபத்துலயே தூக்கு போட்டு மண்டையைப் போட்டுருவாங்கன்னு சொல்லி மிரட்டுகிறான்.

ஆனந்தி ஏ சுயம்பு நீ மறுபடி மறுபடி தப்பு பண்றே. என் அக்காவை விட்டுருன்னு கதறுகிறாள். அதுக்கு சுயம்பு, உன் அக்காவோட வாழ்க்கை முக்கியம்னா நீ இங்கே வந்து சேரு. இல்லன்னா ஏ சேகர் ரெடியா இருக்கியான்னு கேட்கிறான். சேகர் தாலியோட ரெடியா இருக்கண்ணேன். நீங்க சொன்னா கட்டிருவன்ணேன்னு சொல்கிறான்.

அக்காவை ஒண்ணும் பண்ணிடாதே. நான் வரேன். ஆனந்தி சொல்லவும் நீ மண்டபத்து வாசலுக்கு வந்துடு. நான் காரோடு காத்துட்டு இருக்கேன்னு சொல்கிறான் சுயம்பு. அப்போது காயத்ரியும், சௌந்தர்யாவும் அன்புகிட்ட சொல்றேன்னு சொல்கிறாள். ஆனந்தி எங்க அக்காவோட வாழ்க்கை தான் முக்கியம்.


இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமா அன்புவுக்கோ, எங்க அப்பா, அம்மாவுக்கோ தெரியக்கூடாது. யாருக்காவது தெரிஞ்சி இந்தக் கல்யாணம் நின்னுச்சி ஒரு சாவு விழும். அது என்னோட சாவாகத் தான் இருக்கும்னு ஆனந்தி மிரட்டுகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

Tags:    

Similar News