அடுத்த அட்லியாக மாறிட்டாரா ஆர்.ஜே.பாலாஜி?!.. கருப்பு டீசரில் இதெயெல்லாம் பாத்தீங்களா!..
Karuppu Teaser: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. ரெட்ரோ படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் இது. இந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். வழக்கறிஞராக இருக்கும் சூர்யா அவ்வப்போது வேட்டை கருப்புசாமியாக மாறி மக்களுக்கு நல்லது செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சூர்யாவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் சில போஸ்டர்களும், டீசர் வீடியோவும் வெளியானது. டீசரை பார்க்கும் போது ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா படமாக கருப்பு உருவாகியிருப்பது தெரிகிறது. டீசர் முழுக்க மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படம் அமையாத நிலையில் கருப்பு படம் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், டிவிட்டரை கவனமாக பார்த்தால் நிறைய படங்களின் நியாபகம் வருகிறது. சூர்யாவை வக்கீலாக பார்க்கும்போது சில காட்சிகளில் ஜெய்பீம் நியாபகம் வருகிறது. சூர்யா கருப்பசாமியாக ருத்ரதாண்டவம் ஆடுவதை பார்க்கும்போது காந்தாரா பட காட்சிகள் நினைவுக்கு வருகிறது. அதேபோல், கஜினி படத்தில் வாட்டர்மிலன் சாப்பிடும் காட்சியை மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.
மேலும், டீசரில் வரும் பின்னணி இசை லோகேஷின் விக்ரம் படத்தை நினைவுப்படுத்துகிறது. அனிருத்திடம் வேலை பார்த்தவர் சாய் அபயங்கர். விக்ரம் படத்தின் பின்னணி இசையில் இவரின் பங்கு இருக்கிறது. எனவேதான், அது கருப்பு படத்தில் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இப்படி பல படங்களிலிருந்தும் காப்பி அடித்து எல்லாம் கலந்த கலவையாக ஒரு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார் என பலரும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் ’A Feast by Team RJB' என போடுகிறார்கள். ‘இதெல்லாம் இப்போது ஆர்.ஜே.பாலாஜிக்கு தேவையா?’ எனவும் சிலர் திட்டி வருகிறார்கள்.