Siragadikka aasai: பாசமே காட்டாத விஜயாவிற்காக சண்டைக்கு நிற்கும் முத்து - மீனா… அதிர்ச்சியில் ரோகிணி!

By :  AKHILAN
Published On 2025-07-24 10:00 IST   |   Updated On 2025-07-24 10:00:00 IST

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

கிரிஷை அழைத்து வந்து மீனா மற்றும் முத்து இருவரும் பேசிக்கொண்டு இருக்க சந்தேகத்துடன் மீனா கேட்க பார்லர் அம்மா, அம்மாவோட பாசத்தை மறுபடி வாங்கதான் அப்படி பேசிட்டு கிரிஷை அனுப்ப பிளான் பண்ணுது என்கிறார்.

பின்னர் காலையில் கிரிஷ் விஜயாவிடம் நீங்க டான்ஸ் சொல்லி கொடுப்பீங்களா எனக் கேட்க ஆமாம் என்கிறார். எனக்கும் சொல்லி தரீங்களா எனக் கேட்க அதுக்கெல்லாம் ஒரு திறமை இருக்கணும் என்கிறார். இதில் கடுப்பான முத்து நீ கத்துக்கணுமாடா எனக் கேட்க ஆமாம் என்கிறார்.

உடனே ஒரு பாட்டை போட்டு ஆடச்சொல்ல கிரிஷ் டான்ஸ் ஆடுகிறார். முத்து, ஸ்ருதி, ரவி என எல்லாரும் கூட சேர்ந்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர். மனோஜ் மற்றும் ரோகிணி அமைதியாக நிற்க அப்போ வரும் சிலர் கூட்டத்துடன் விஜயாவை மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். 

 

விஜயா கத்துக்கிறார். என் வீட்டில் என்னையே பேசுறீங்க எனக் கேட்க எங்க பொண்ணு வாழ்க்கைக்கு வழி சொல்லுங்க என்கிறார். ஆண்கள் அதிரடியாக பேச முத்து பேச வந்ததை பேசாம சத்தம் போடுற வேலை வச்சிக்க கூடாது என்கிறார்.

ஒரு கட்டத்தில் ரதியின் கர்ப்பம் குறித்து சொல்ல குடும்பமே அதிர்ச்சியில் உறைகின்றனர். ரதி அமைதியாக நிற்க திலீபன் வீட்டில் தானே போய் பேசணும் என்கிறார். அவங்க வீட்டில் பேசுனோம். அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை என்கிறார்.

ஒரு பெண் விஜயாவை அடிக்க வர மீனா கடுப்பாகி தடுத்து விடுகிறார். என் அத்தை மேல ஒரு கை பட்டுச்சு சும்மா விடமாட்டேன் என சத்தம் போட விஜயா அதிர்ச்சியாக பார்க்கிறார். ரவி மற்றும் ஸ்ருதி கூட ஆறுதலாக நிற்க ரோகிணி மற்றும் மனோஜ் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்.

முத்து எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் அந்த பையன் வீட்டில் பேசுறேன் என்கிறார். அவர்களும் முத்துவின் பேச்சை கேட்டு கிளம்பி விட விஜயா அதிர்ச்சியாக இருக்கிறார். அவரை ரூமில் அமர வைத்து குடும்பத்தினர் ஆறுதல் சொல்கின்றனர்.

முத்து என் உயிரே போனாலும் உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் அம்மா என்கிறார். விஜயா உறைந்து பார்க்க மனோஜ் ஏன் எங்களால எதுவும் செய்ய முடியாதா என்கிறார். நீனா என நக்கலாக கேட்க நான் எவ்வளோ படிச்சி இருக்கேன் தெரியுமா என்கிறார்.

ரவி இவன் வேற டெய்லி ஒருமுறை சொல்லிடுறான் என்கிறார். விஜயா அமைதியாக இருக்கிறார். முத்து திலீபன் ரதி கல்யாணம் குறித்து பேச வேண்டும் என முடிவெடுக்கிறார்.

Tags:    

Similar News