தக் லைப் நஷ்டம்: பாபா ரஜினி நிலைமைதான் கமலுக்கும்!.. இவ்வளவு கோடியா திருப்பி தரணும்?!...
Thug life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம்தான் தக் லைப். 38 வருடங்களுக்கு பின் மணிரத்னமும் கமலும் இணைந்ததால் நாயகன் போல அல்லது அதற்கு மேல் ஒரு சிறப்பான படத்தை இருவரும் கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷாவுக்கும் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. கமல் எடுத்து வளர்க்கும் சிம்புவே ஒரு கட்டத்தில் கமலுக்கு எதிராக திரும்பும்படி திரைக்கதை அமைத்திருந்தார் மணிரத்னம். அதிலெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால், கமலுக்கு கீப் திரிஷா. கமலை கொன்றுவிட்டதாக நினைத்து திரிஷாவை கீப்பாக வைத்துக்கொள்ள சிம்பு ஆசைப்படுகிறார் என கதை சென்றால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இதுதான் ட்ரோலில் சிக்கியது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இல்லை என நெகட்டிவான விமர்சனங்களை சொல்ல அது படத்தின் வசூலை பாதித்தது. எனவே, இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஒருபக்கம், கர்நாடகாவிலும் இப்படம் வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்தவர் என்கிற முறையில் கமலுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.
சினிமாவில் லாப நஷ்டம் என்பது சாதாரண ஒன்றுதான். ஆனால், நஷ்டம் குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், மிகவும் அதிக அளவில் இருந்தால் அந்த கடனை தயாரிப்பாளர் திருப்பி தரவேண்டியிருக்கும். அந்தவகையில், தக் லைப் படத்தை வெளியிட்ட கமல் வினியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய பணத்தில் 187 கோடி வரை திருப்பி தர வேண்டுமாம்.
பாபா படத்தை ரஜினி தயாரித்தார். அந்த படம் நஷ்டம் அடைந்ததால் வினியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. தற்போது அதே நிலைமை கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. விரைவில் நஷ்டமடைந்தவர்களுக்கு கமல் பணத்தை திருப்பி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் அன்பு - அறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரின் 234வது திரைப்படம் ஆகஸ்டு மாதம் துவங்கவுள்ளது என்கிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.