பிரதீப் ரங்கநாதனுக்கு எமனாக அவர் படமேவா!.. தீபாவளி ரிலீஸில் சிக்கல்!...

By :  MURUGAN
Published On 2025-07-03 11:39 IST   |   Updated On 2025-07-03 11:39:00 IST

Pradeep Ranganathan: குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநான் கோமாளி படம் மூலம் இயக்குனராக மாறினார். ரவி மோகன் நடித்து வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து 3 வருடங்கள் கழித்து பிரதீப் இயக்கி நடித்த திரைப்படம்தான் லவ் டுடே. இந்த கால இளசுகள் செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என காட்டியிருந்தார்.

அதற்கு சரியான கதை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றும் காட்டினார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. டிராகன் படம் பிரதீப்பை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார்.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என இரண்டு படங்களில் நடித்தார். இதில் டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தில்தான் இப்போது இளசுகளின் கனவு கன்னியாக மாறியிருக்கும் கயாடு லோஹர் அறிமுகமானார். அடுத்து எல்.ஐ.கே படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 20ம் தேதி வருகிறது. எனவே, தீபாவளி ரிலீஸ் படங்கள் 16 மற்றும் 17 தேதிகளில் வெளியாகும். எனவே, இந்த தேதியில்தான் எல்.ஐ.கே படம் வெளியாகும். அதேநேரம், செப்டம்பர் மதம் 18ம் தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ட்யூட் (Dude) படம் வெளியாகவுள்ளது.


ஒரு ஹீரோவின் படம் வெளியாகி 30 நாட்கள் இடைவெளியில் அதே ஹீரோவின் மாற்றொரு படம் வெளியானால் அது ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என தெரியவில்லை. எல்.ஐ.கே படம் சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் ட்யூட் படத்திற்கு அது பிளஸ்ஸாக அமையும். அதுவே எல்.ஐ.கே படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தால் அது ட்யூட் படத்தின் வியாபாரத்தையே பாதிக்கும். எனவே, என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை.

Tags:    

Similar News