தேடுதல் வேட்டையில் சிக்கிய அடுத்த இயக்குனர்.. சிவகார்த்திகேயனின் சாய்ஸ் வேற லெவல்

By :  ROHINI
Published On 2025-07-03 17:22 IST   |   Updated On 2025-07-03 17:22:00 IST

sivakarthikeyan

சில தினங்களாக சிவகார்த்திகேயன் தனுஷ் இடையே இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு இடையே எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதை பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனை இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ் தான். இது பல பேருக்கு தெரியும். விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து மிமிக்ரி போன்ற காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் சிவகார்த்திகேயன்.

அவருடைய ஹியூமர் காமெடி தனத்தை எல்லாம் பார்த்த தனுஷ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .தான் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தில் அவரை இரண்டாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படம் மெரினா. அந்தப் படத்தில் அவருடைய ஹியூமருடன் சேர்ந்த நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து காமெடியை மையப்படுத்தி வந்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக விஜய் அஜித்துக்கு அடுத்தபடியான ஒரு நிலையில் இருக்கிறார் .அதுவும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. அந்தப் படம் 350 கோடி வசூல் பெற்று பெரும் சாதனை படைத்தது .

அதன் பிறகு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவர் கமிட்டான இயக்குனர்கள் அனைவருமே சினிமாவில் கைதேர்ந்த இயக்குனர்கள். பல நல்ல நல்ல படங்களை கொடுத்தவர்கள். இப்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் .

இதற்கு அடுத்தபடியாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு இயக்குனரும் சிவகார்த்திகேயன் லிஸ்டில் இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்திருக்கின்றன.

pushkar

அவர் வேறு யாருமில்லை. விக்ரம் வேதா என்ற ஒரு தரமான படத்தை கொடுத்த புஷ்கர் காயத்ரி இவர்களுடன் பேச்சு வார்த்தையில் சிவகார்த்திகேயன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது நடந்து விட்டால் இவர்கள் கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News