அஜித் பண்ணும் அட்டகாசம்.. விஜய் ரஜினியே மேல்! புலம்பும் கோலிவுட்

By :  ROHINI
Published On 2025-07-03 16:36 IST   |   Updated On 2025-07-03 17:51:00 IST

rajini

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பற்றிய செய்தி தான் வந்து கொண்டே இருந்தன. அதாவது அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை என்றும் அதற்கு அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அதாவது தயாரிப்பாளர்களிடம் அஜித் தரப்பிலிருந்து முன் பணமாக பெருந்தொகையை அஜித் கேட்பதாகவும் மீதி பணத்தை போஸ்ட் டேட்டட் செக்காக தர வேண்டும் என்றும் கண்டிசனை போட்டாராம் .

அது மட்டுமல்ல ஷூட்டிங் முடிந்ததும் உடனே அவருடைய சம்பளத்தை மொத்தமாக கொடுத்து விட வேண்டும் என்றும் அந்த கண்டிஷனில் குறிப்பிட்டு இருந்ததாம். இதில் இன்னொரு கண்டிஷன் என்னவெனில் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் சம்பளம் சென்னையில் உள்ள வங்கி அக்கவுண்டுக்கு இல்லாமல் துபாயில் இருக்கும் அக்கவுண்டில் தான் போட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

அப்படி துபாய் அக்கவுண்டுக்கு இங்குள்ள தயாரிப்பாளர்கள் போடும் பட்சத்தில் அது தயாரிப்பாளர்களுக்குத்தான் பெரும் பிரச்சனையாகிவிடும் என்பதனால் தான் அவர் படத்தை தயாரிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை அறிந்த ஒரு சில தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு விஜய் ரஜினியே பரவாயில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதுதான் அவர்களின் முதல் நோக்கமாக இருக்கும்.

அஜித் மாதிரி இப்படி எல்லாம் கண்டிஷன் போட மாட்டார்கள் என்றும் புலம்பி வருகிறார்கள் .தற்போது ரஜினி கூலி திரைப்படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. கூலி படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் வியாபாரம் நினைத்ததை விட பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறதாம். அதற்கு ரஜினி மட்டும் காரணம் இல்லை.

லோகேஷும் காரணம். ஏனெனில் லோகேஷ் இதற்கு முன் எடுத்த பெரிய பெரிய படங்கள் தான். கூலி படத்தின் வியாபாரத்தை வைத்து ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இவருடைய சம்பளத்தை கேட்டதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News