அண்ணே நமக்கு எதுக்குனே டைரக்‌ஷன்?!.. ராயன் தனுஷை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்...

தனுஷின் ராயன் படத்தை ரசிகர்கள் சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Update: 2024-08-07 13:00 GMT

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து நடிப்பை கற்றுக்கொண்டவர். துவக்கத்தில் தடுமாறினாலும் போகப்போக பிக்கப் செய்து நடிக்க துவங்கிவிட்டார். தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்ததால் முன்னணி நடிகராகவும் மாறினார்.

ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா கதை, மறுபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதை என்பதே தனுஷுன் ரூட்டாக மாறியது. ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றது அவர் நன்றாக நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்கள்தான். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கி சீனியர் நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்தார்.

இப்போது திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார்., இன்னும் 2 வருடங்களுக்கு அவரின் கால்ஹீட் பிஸியாக இருக்கிறது. ஆனால், அவ்வப்போது அண்ணன் செல்வராகவன் போல சினிமாவை இயக்க வேண்டும் என்கிற ஆசையும் எட்டி பார்க்கும். ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கி பாராட்டை பெற்றார்.

இப்போது ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தனுஷின் 50வது திரைப்படம் இது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை வளர்க்கும் பொறுப்புள்ள அண்ணன், அவருக்கான பிளாஷ்பேக், இரண்டு கேங்கஸ்டர் கும்பல், அவர்களுடனான பிரச்சனை என படம் பயணிக்கிறது.

ஆனால், கதை அழுத்தமாக இல்லாத காரணத்தால் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை, கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதும் தெரியவில்லை, கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லை. யார் வில்லன் என்பதே தெரியவில்லை.

செல்வராகவனும், வெற்றிமாறனும் இணைந்து படத்தை இயக்கியது போல இருக்கிறது என பலரும் சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், ‘நமக்குதான் நடிப்பு நல்லா வருதே... அப்புறம் எதுக்கு டைரக்சன்?’ எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலரோ இந்தியன் 2 படத்தில் வரும் பாபி சிம்ஹா காட்சியோடு தனுஷை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.

Tags:    

Similar News