ரசிகர்' கொலைவழக்கில் நடிகருக்கு 'நிரந்தர' ஜாமீன்!..
பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் நடிகர் தர்ஷன் முதுகில் அறுவைசிகிசிச்சை செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஐகோர்ட் அக்.30ம் தேதி கடுமையான நிபந்தனைகளுடன் 6 வாரங்கள் ஜாமீன் வழங்கியது.
தற்போது தர்ஷன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். (இதுவரை அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெறவில்லை) இதற்கிடையில் நிரந்தர ஜாமீன் கேட்டு, மீண்டும் அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு டிச.13ம் மதியம் வழங்கப்படும் என ஐகோர்ட் அறிவித்தது. அந்தவகையில் இன்று மதியம் 2.30 மணிக்கு தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தர்ஷன் தவிர மற்ற அனைவரும் டிச.16ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.