இதுவரைக்கும் 1000 கோடி வசூலை தொடாத தமிழ் சினிமா!.. எப்ப கிடைக்கும் அப்படி ஒரு ஹிட்டு?!...

By :  Murugan
Update: 2024-12-13 11:51 GMT

movies

Pushpa 2: தமிழில் முதல் தமிழ் சினிமா 1918ம் வருடம் வெளியானது. இது ஒரு ஊமைப்படம். நடிகர்கள் பேசி நடித்து 1931ம் வருடம் வெளியான முதல் படம் காளிதாஸ். அப்படிப்பார்த்தால் தமிழ் சினிமாவின் வயது 106. சினிமாவில் வியாபாரம் என்பது மிகவும் முக்கியம். சினிமா எல்லோருக்கும் கலை கிடையாது.

அதை வெறும் வியாபாரமாக மட்டுமே 90 சதவீத தயாரிப்பாளர்கள் கருதுவார்கள். நல்ல சினிமா என்பது அவ்வப்போது வரும். சில இயக்குனர்கள் வருவார்கள். அதில் சில படங்கள் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெறும். சில படங்களை விமர்சனரீதியாக வெற்றியை பெறும். ஆனால், வசூல் இருக்காது. இதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

பேன்  இண்டியா ஃபீவர்:

இப்போதெல்லாம் சினிமா பேன் இண்டியா என்கிற ரேஞ்சுக்கு போய்விட்டது. அதாவது ஒரு படம் ஒரு மொழியில் உருவாகி இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடுவார்கள். இதனால் பல ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாகி படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.


இதை துவங்கி வைத்தது ராஜமவுலியின் பாகுபலி படம்தான். அதன்பின் கேஜிஎப், பாகுபலி 2, கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. முன்பெல்லாம் 100 கோடி வசூல் என்றாலே அடேங்கப்பா என பேசுவார்கள். அதன்பின் அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 400,500 கோடி என ஆகிவிட்டது. இப்போது அதையும் தாண்டி ஆயிரம் கோடி வசூல் என்கிற வார்த்தை பிரபலமாகி விட்டது.

பாகுபலி2, ஆர்.ஆர்.ஆர்:

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய 2 படங்களும் 1000 கோடி வசூலை அள்ளியது. இந்தியில் சல்மான் கான் நடித்த டங்கல், ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் படங்கள் ஆயிரம் கோடியை வசூல் செய்தது. கன்னடத்தில் கேஜிஎப், கேஜிஎப் 2 படங்கள் சூப்பர் ஹிட் என்றாலும் 1000 கோடி வசூல் செய்யவில்லை. அதேபோல், கல்கி படம் பேன் இண்டியா அளவில் ஹிட் அடித்தது. சிலர் அதை 1000 கோடி வசூல் என சொல்கிறார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதுபற்றி அறிவிக்கவிலை.


இறுதியாக சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளியிருக்கிறது. அதுவும் படம் வெளியாகி 6 நாட்களில் இந்த சாதனையை இப்படம் செய்திருக்கிறது. இப்படி இதுவரை தெலுங்கு, ஹிந்தி படங்கள் மட்டுமே 1000 கோடி வசூலை தொட்டிருக்கிறது. தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்கள் இதுவரை ஆயிரம் கோடி வசூலை பெறவில்லை. ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜயின் லியோ ஆகிய படங்கள் 600 கோடியை தாண்டி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. கமலின் விக்ரம் படம் 500 கோடியை தொட்டது.

மண்ணை கவ்வியா கங்குவா:

சூர்யாவின் கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என ஞானவேல் ராஜா புரமோஷன்களில் சொன்னார். ஆனால், அந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. வசூல் மன்னனாக பார்க்கப்பட்ட விஜயும் அரசியலுக்கு போய்விட்டார். இனிமேல் ரஜினி, அஜித் மீதுதான் இந்த நம்பிக்கை இருக்கிறது.

ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டுமெனில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும். அப்படி ஒரு தமிழ் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News