ஏன்டா புரொடியூசர் பையன்னா அப்படியே நடிக்க வந்துருவீங்களா?!.. ஜீவாவிடம் பச்சையா கேட்ட நாசர்...

By :  Sankaran
Update:2025-02-20 08:30 IST

சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. இவரது மகன் ஜீவாவை தமிழ்சினிமாவில் நடிகராக களம் இறக்குகிறார். 2003ல் ஆசை ஆசையாய் என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதே ஆண்டில் தித்திக்குதே என்ற படத்திலும் நடிக்கிறார். அப்போது தயாரிப்பாளரின் மகன் என்ற அளவில்தான் அவர் பேசப்பட்டார்.

அற்புதமாக நடித்தார்: ஆனால் அடுத்ததாக அவர் 2005ல் நடித்த ராம், டிஷ்யூம் படங்களில் தனித்து வெளியே தெரிய ஆரம்பித்தார். அந்தளவு அற்புதமாக படங்களில் நடித்தார். கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், கோ படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தன. இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நடித்த போது நடிகர் நாசரால் இவருக்கு நேர்ந்த அவமானங்கள் என்னென்னன்னு இப்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

மொக்கையா பதில்: நான் முதல்ல புரொடியூசர் சன்னாகத் தான் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ ஷெட்டுக்குள்ள வந்தாரு. அப்படியே பார்த்தாரு. என்ன படிச்சிருக்கேன்னு கேட்டாரு. அப்போ ஏதோ மொக்கையா பதில் சொன்னேன். அப்போ வந்து அவரு சரியாகவே பேச மாட்டேங்கிறாரு. ஃபார்மலா இருக்காரு. மத்த எல்லா ஆர்டிஸ்டும் நல்லா பேசுறாங்க.

சீனுக்குப் பிரிப்பேர்: நாசர் சார் எங்கிட்ட சரியாவே பேச மாட்டேங்கிறாரு. என்ன சார் நிறைய டயலாக் என்னன்னு கேட்டேன். அவரு அப்படியே பார்த்தாரு. ஒரு மாதிரியா இருக்கும். திடீர்னு ஒருநாள் கூப்பிட்டாரு. என்னன்னு கேட்டேன். 'ஏன் முதல்ல நடிக்கிறதுக்கு முன்னாடி சீனுக்குப் பிரிப்பேர் பண்ண மாட்டேங்கற?'ன்னு கேட்டாரு. 'இல்ல சார். நான் ஸ்ட்ரெய்ட்டாவே பண்ணிடுவேன் சார்'னு சொன்னேன்.


பச்சையா கேட்டாரு: 'ஆக்ட் பண்றதுன்னா மட்டும் ஸ்ட்ரெய்ட்டாவே வந்துடுவீங்களா?'ன்னு கேட்டாருன்னு ஜீவா சொன்னார். 'இவ்வளவு ஓப்பனா கேட்டாங்களா சார்'னு ஆங்கர் கேட்கிறார். 'இதை விட ஓப்பனா கேட்டாரு. புரொடியூசர் சன்னுன்னா நடிக்கிறதுக்குக் கிளம்பி வந்துடுவீங்களான்னு ஓபனா இன்னும் சொல்லப் போணும்னா பச்சையா கேட்டாரு'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜீவாவின் முதல் படமான ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் ஜீவாவுடன் நடித்தவர்தான் நாசர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News