காலங்காத்தாலேயே 15000 ரூபாய ஆட்டையைப் போட்டுட்டாங்களே... நடிகர் மிர்ச்சி செந்தில் புலம்பல்

By :  Sankaran
Update:2025-02-24 08:00 IST

சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என பிரபலமான டிவி தொடர்களில் நடித்தவர் நடிகர் மிர்ச்சி சிவா. தற்போது ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். இப்போது இவர் தன்னிடம் இருந்து நூதன முறையில் 15 ஆயிரம் ரூபாயை ஆட்டையைப் போட்டவர் பற்றி சோகத்துடன் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வாங்க பார்க்கலாம்.

15 ஆயிரம் ரூபா: அழுவுறதா சிரிக்கிறதான்னு தெரியல. எவ்வளவுதான் படிச்சி உலக அறிவை வளர்த்தாலும் ஒருத்தன் சப்பையா ஆன்லைன்ல வாட்ஸ் அப் மெசேஜ்ல 15 ஆயிரம் ரூபாயை எங்கிட்ட இருந்து ஆட்டையைப் போட்டுட்டான். கோயம்முத்தூர்ல இருந்து எனக்கு தெரிஞ்ச பெரிய ஓட்டல் தொழில் அதிபர் அவரு வாட்ஸ் அப்ல இருந்து ஒரு மெசேஜ் வருது.

வாட்ஸ் அப் மெசேஜ்: ஐ நீட் அட்டெண்ட். நான் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். அவருக்கிட்ட இருந்து மெசேஜ் ரொம்ப ரேராத்தான் வரும். அவருக்கிட்ட இப்படி ஒரு மெசேஜா? நான் உடனே என்ன சொல்லுங்கன்னேன். ஒரு 15 ஆயிரம் ரூபாயை உடனே அனுப்புன்னு அடுத்த மெசேஜ். ஓகே சார். நம்பருன்னு கேட்டேன். நம்பரு ஒண்ணு அனுப்பிருந்தாரு. அதை செக் கூட பண்ணலை.

பணத்தை அனுப்பிட்டுப் பார்த்தா, ஏதோ யோகேந்தர்னு சொல்லிட்டு வேற ஏதோ பேரு வருது. யாரு இது? அவரு நம்பரு இல்லாம வேற ஏதோ நம்பருக்கு அனுப்ப சொல்றாருன்னா யாரு இது? ஸ்கேமா இருக்குமோன்னு நினைக்குறதுக்குள்ள பணம் போச்சு.

500வது கால் அவருக்குப் போன் பண்ணிக் கேட்டா நான் நினைச்சா மாதிரியே, 'என்ன செந்தில் காலையிலேயே என் போன் வாட்ஸ் அப்பை ஹேக் பண்ணிட்டான். இது 500வது கால் நீ எனக்கு பண்றது. பல பேருக்கு மெசேஜ் போயிருக்கு. சில பேர் பணத்தையும் இழந்துருக்காங்க.


சுட்ட கதை இல்ல... பட்ட கதை: நான் ஏற்கனவே சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்கேன்'னாரு. ஐயய்யோ எவனோ இப்படி புகுந்து ஆட்டையைப் போட்டுட்டானே... உங்களுக்கும் இது மாதிரி யாராவது வாட்ஸ் அப்ல பணம் கேட்குறாங்கன்னா தயவு செஞ்சு யோசிக்காம அனுப்பி விட்டுறாதீங்க. சுடச்சுட சுட்டுட்டு வந்துருக்கிறேன். சுட்ட கதை இல்ல. உண்மையிலேயே பட்ட கதை என்று புலம்பித் தவிக்கிறார் மிர்ச்சி செந்தில்.  

Similar News