விஜயுடன் மீட்டிங்!.. ரகசிய அரசியல் வியூகம்!.. லீக் பண்ணிய பார்த்திபன்!....

By :  Murugan
Update:2025-02-20 09:22 IST

Actor Parrthiban: தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமாக யோசிப்பவர் பார்த்திபன். பாக்கியராஜிடம் உதவியாளராக பணிபுரிந்து சினிமாவை கற்றுக்கொண்டவர். புதிய பாதை என்கிற கதையை எழுதி ரஜினி, கமல் என பல நடிகர்களிடமும் கதை சொன்னார். ஒருகட்டத்தில் யாரும் நடிக்க முன்வரவில்லை.

எனவே, அவரே ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். அப்படி வெளியான புதிய பாதை சூப்பர் ஹிட் அடித்தது. எதையும் புதுமையாக யோசிப்பவர் பார்த்திபன். வித்தியாசமான கதைகளை புது பாணியில் சொல்வது இவரின் வழக்கம். தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் தானே நடித்து வந்தார்.

இவர் இயக்கத்தில் புதிய பாதை, உள்ளே வெளியே உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே வசூலை அள்ளியது. ஒருபக்கம், குடைக்குள் மழை, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு எண் 7, இரவின் நிழல் என பல புதிய, பரிசோதனை முயற்சிகளை சினிமாவில் செய்து பார்த்தவர் இவர்.


சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே விட்டும் இருக்கிறார். ஒருபக்கம், பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடி கலந்த வில்லனாக நடித்தும் இருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் அப்படி அவர் நடித்த வேடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் இயக்கம் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தனது சமூகவலைத்தளங்களில் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு நண்பரும், தவெக தலைவருமான விஜயுடன் உரையாடல்.. பஜ்ஜியுடன் தேநீர்.. வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் என விடிய விடிய நீண்ட நிகழ்வுகள்.. சரி அதை பதிவு செய்ய ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாம் என பார்த்தால் எல்லாம் கனவு...

ஏன்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருகிறதோ?.. ஆனால் சத்தியமாக வந்தது.. கனவுகளை நம் நினைவுகளின் நகல்கள் என சொல்வார்கள். சமீபகாலமாக அவரின் அரசியல் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதுவே காரணமாக இருக்கலாம்’ என பதிவிட்டிருக்கிறார்.

Tags:    

Similar News