இரண்டு மீட்டிங் நடந்தும் மாரி செல்வராஜுக்கு ‘No சொன்ன ரஜினி!.. இதுதான் காரணமா?!...
Mari selvaraj: தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். சமூகரீதியாகவும், அரசியல்ரீதியாகாவும், சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த அல்லது சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை இவரின் படங்களில் பேசுவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள்.
சாதிய படம்: இந்த படத்திலேயே சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக பேசியிருந்தார். அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படத்திலும் பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஒரு விஷயத்தை பற்றி பேசியிருந்தார். அவரின் எல்லா படங்களிலுமே சாதிய பாகுபாட்டை ஆழமாக பேசுவதால் அவர் மீது சாதி படம் எடுக்கும் இயக்குனர் என்கிற முத்திரையும் விழுந்தது.
இதற்கு பதில் சொன்ன மாரி செல்வராஜ் ‘என சமூக மக்கள் பட்ட கஷ்டங்களை பேசுகிறேன். தொடர்ந்து பேசுவேன்’ என சொல்லியிருந்தார். உதயநிதி மற்றும் வடிவேலுவை வைத்து அவர் எடுத்த மாமன்னன் படம் அரசியலில் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறார்கள் என காட்டியிருந்தார்.
மாரி செல்வராஜ் மீது விமர்சனம்: மேலும், வாழை படத்தில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் வாழை தூக்கி சுமந்து வாழ்க்கையை ஓட்டும் மக்கள் பற்றி பேசியிருந்தார். மாரி செல்வராஜின் படங்கள் எல்லாமே கடும் விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தும். தமிழகத்தில் முன்பு போல இப்போது சாதி பிரச்சனைகள் இல்லை. எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இவர் பணம் சம்பாதிக்க எப்போதே நடந்த விஷயங்களை திரைப்படங்களில் காட்டி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது உண்டு.
ரஜினிகாந்த்: இந்நிலையில்தான் மாரி செல்வராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 2 முறை ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். ஒருமுறை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினிக்கு கதை சொல்ல மாரி செல்வராஜை அனுப்பினார்.
ஆனால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆர்வம் காட்டாத ரஜினி சில காரணங்களை சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம். மாரி செல்வராஜ் மீது சாதி படமெடுக்கும் இயக்குனர் என்கிற இமேஜ் இருக்கிறது. எனவே, தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க வேண்டாம் என ரஜினி நினைப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்தே ரஜினியை கையை சுட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.