குட் பேட் அக்லி ஒரு ஃபேன் பாய் ஃபீஸ்ட்!... சும்மா அதகளமா இருக்கும்!.. ஹைப் ஏத்தும் ஜிவி பிரகாஷ்!..

By :  Murugan
Update:2025-02-20 10:06 IST

Good Bad Ugly movie: அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, இந்த படம் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தவில்லை. இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் போட்ட பணத்தை எடுக்குமா என்பதும் தெரியவில்லை. இந்தியாவில் மட்டும் இப்படம் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

விடாமுயற்சி வசூல்: வெளிநாடுகளில் 30 கோடி என வைத்துக்கொண்டாலும் மொத்த வசூல் அஜித்தின் சம்பளத்தை கூட தொடாது. ஆனாலும், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளில் சில கோடிகள் கிடைக்கும். ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் பட கதையை அடிப்படையாக வைத்தே இப்படத்தை உருவாக்கியிருந்தார்கள்.

இந்த படம் உருவான போது பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. குறிப்பாக லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், படம் 70 சதவீதம் முடிந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார் அஜித்.

பக்கா கேங்ஸ்டர் மூவி: ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் மார்க் ஆண்டனி என 2 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மார்க் ஆண்டனி போலவே இந்த படத்தையும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவே ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கியிருக்கிறார்.


மேலும், இந்த படத்தில் பல கெட்டப்புகளில் அஜித் வருகிறார். எனவே, இந்த படம் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் ஊடகம் ஒன்றில் பேசியபோது இப்படம் பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஜிவி பிரகாஷ்: குட் பேட் அக்லி செம மாஸா இருக்கும். 18 வருடங்களுக்கு மீண்டும் அஜித் சார் படத்திற்கு இசையமைக்கிறேன். இந்த படம் கண்டிப்பாக எனக்கு ஸ்பெஷல்தான். படத்துல பட்டாசு வெடிக்கும். ஃபேன் பாய் ஃபீஸ்ட் என சொல்லுவார்கள் இல்லையா.. பேட்ட, விக்ரம் மாதி ஒரு பக்கா அஜித் ரசிகன் எடுத்த படமா குட் பேட் அக்லி இருக்கும்’ என சொல்லி ஹைப் ஏற்றியிருக்கிறார்.

Tags:    

Similar News