அவங்களைப் பார்த்து அப்படி மாறிடாதீங்க... ராம்கி சொல்லுற இதைப் ஃபாலோ பண்ணலாமே...!

By :  Sankaran
Update: 2024-12-15 17:00 GMT

 ராம்கி 

இணைந்த கைகள் படத்தில் நடிகர் ராம்கி, அருண்பாண்டியனுடன் கைகோர்த்து பல சாகசங்களைச் செய்தார். படம் அதிரி புதிரி ஹிட் ஆனது. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர்ஹிட். எந்தவித ஆபாசமும், இரட்டை அர்த்த வசனங்களும் இல்லாமல் இவரது படங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னப்பூவே மெல்லப் பேசு, மாசாணி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் ராம்கி. 1988ல் விஜயகாந்துடன் இவர் இணைந்து நடித்த செந்தூரப்பூவே படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் நிரோஷா, ஸ்ரீபிரியா, ஆனந்த்ராஜ், செந்தில், சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல மருதுபாண்டி, வெள்ளைத்தேவன், வனஜா கிரிஜா, கருப்பு ரோஜா, நிலவே முகம் காட்டு ஆகிய படங்களும் இவரது நடிப்புக்குப் பெயர்போனவை.  ராம்கி தன்னுடன் ஜோடியாக பல படங்களில் நடித்த நிரோஷாவையே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,


தற்போது அண்ணனா சொல்றேன் என்று ரசிகர்களுக்கு நடிகர் ராம்கி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உங்க வாழ்க்கையில சக்சஸ் வேணுமா நிம்மதி வேணுமான்னு கேட்hல் நான் நிம்மதியைத் தேர்ந்தெடுப்பேன். ஏன்னா நிம்மதி சக்சஸ் கூட்டிட்டு வந்துரும். ஆனால் சக்சஸ் ஒருபோதும் நிம்மதியைத் தராது. மனிதர்கள் இன்று பணம் தான் பிரதானம் என்று அதன்பின் ஓடுகிறார்கள்.

அடுத்தவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சந்தோஷத்தை அடுத்தவர்களுக்குக் கொடுத்து விட்டு எனக்கு கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்பது எப்படி நியாயமாகும்? நம் சந்தோஷம் நமக்கு தான் என்கிறார் ராம்கி. அதே நேரம் படிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

நான் 22 வயசுல ஹீரோ ஆயிட்டேன். ஒருவேளை அப்படி ஆகாம இருந்திருந்தா நிலைமை மோசமாக வந்திருக்கும். ஏன்னா நான் படிக்கல. நிறைய பேரு சொல்லுவாங்க. படிக்காதவங்க ஜெயிச்சுட்டாங்கன்னு. அது லட்சத்துல சில பேரு இருப்பாங்க.

ஆனா எத்தனை பேரு அப்படின்னு பார்த்தா 10, 15 அப்படின்னு தேட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா படிச்சு ஜெயிச்சவன் கோடி பேரு இருக்கான். இத ஒரு அண்ணனா சொல்றேன். படிக்குற நேரத்துல படிச்சிருங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க என்கிறார் நடிகர் ராம்கி.

Tags:    

Similar News