என்னப்பா ஆள் ஆளுக்கு கிளம்புறீங்க!.. இதுவும் ஒரு புரமோஷனோ?.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

By :  Ramya
Update: 2025-01-13 13:34 GMT

Actor Ravi : தமிழ் சினிமாவில் ஜெயம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் ரவி. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் அன்று முதல் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலான திரைப்படங்களில் இவரது பெயர் ஜெயம் ரவி என்றே இடம்பெற்று இருந்தது. பெயருக்கு ஏற்ற வகையில் அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

படத்தின் கதையை தேர்வு செய்து நடித்து வந்த ஜெயம் ரவி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். கடந்த வருடம் அவருக்கு மிகுந்த மோசமான வருடமாகவே அமைந்தது. அடுத்தடுத்து தோல்வி படங்கள் என்று இருந்து வந்த ஜெயம் ரவி திடீரென்று தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஜோடிகளாக வளம் வந்த இருவரும் விவாகரத்து அறிவித்திருந்தது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் மிகப்பெரிய பிளாப்பானது. தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதன் ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைத்திருக்கின்றார். அது என்னவென்றால் 'அளவற்ற கனவோடு புத்தாண்டில் நாம் கால் பதித்திருக்கும் இந்த தருணத்தில் உங்களிடம் என் வாழ்க்கையில் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியை அடைகின்றேன்.

என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகின்றது. நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடிதளமாக அமைந்திருக்கின்றது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில் சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டிருக்கின்றேன்.

எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன். இந்த நாள் தொடங்கி நான் ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அழைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.


இனிவரும் காலங்களில் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவை பார்த்து பலரும் சமூக வலைதள பக்கங்களில் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். எல்லாரும் ஏன் இப்படி இருக்கின்ற பெயரை மாற்றி வருகிறீர்கள். ஏன் இத்தனை வருடங்களாக இந்த பெயரில் தானே அழைக்கப்பட்டு வந்தீர்கள்.

அப்போது தெரியவில்லையா? நாளை படம் வெளியாகின்றது என்பதற்காக இப்படி ஒரு புரமோஷனா? ஒருவேளை தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருவதால் எதற்கு ஜெயம் ரவி என்கின்ற பெயர் ரவியே போதும் என்று முடிவு செய்து விட்டீர்களா? என்று சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ஜெயம்ரவியை விமர்சித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News