3 வருஷமா நடிச்சு என்னை ஏமாத்திட்டாரு!.. எனக்கு நீதி வேணும்.. குமுறும் துணை நடிகை..!
தமிழ் சினிமாவில் காதல் என்கின்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சுகுமார். அந்த திரைப்படத்திற்கு பிறகு காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களை இயக்கி தோல்வியை சந்தித்த சுகுமார் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றார். நீண்ட வருடத்திற்கு பிறகு அண்மையில் ஸ்டார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெற்றி வேலப்பர் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அவர் மீது ஒரு துணை நடிகை பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர் செய்தியாளர்களிடம் மூன்று வருடங்கள் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது 'தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றது.
கணவரை பிரிந்து பல வருடம் தனியாக இருந்த எனக்கு காதல் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் அவரும் நான் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். தான் சினிமா இண்டஸ்ட்ரியல் இருப்பதால் ஒரு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன்.
மேலும் ஆரம்பத்தில் என்னை மிக நன்றாக பார்த்துக் கொண்டிருந்தார். தர்காவில் வைத்து தாலி கட்டி மெட்டி போட்டு விட்டார். ஆனால் மெட்டி போட்ட ஆதாரம் மட்டுமே தன்னிடம் இருக்கின்றது. தாடி கட்டிய புகைப்படம் அவரிடம் இருக்கின்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வந்ததால் பலரிடம் மூன்று லட்சம் ஐந்து லட்சம் என்று கடன் வாங்கி கொடுத்தேன்.
சமீபத்தில் கூட கார் கடனில் இருப்பதால் லோன் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறி கெஞ்சினார். பின்னர் எனது நகையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து அவருக்கு கொடுத்தேன். அனைத்தையும் என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். தற்போது எனது தொலைபேசி எண்ணை பிளாக்கில் போட்டு விட்டார்.
மூன்று வருடங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பணரீதியாகவும் பயன்படுத்திவிட்டு என்னை ஏமாற்றி விட்டார். எனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.