எல்லாரும் திட்றாங்க!. சூரி இனிமேல் அப்படி நடிக்கமாட்டார்!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்...
Actor soori: மதுரையிலிருந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த பல ஆயிரம் பேரில் சூரியும் ஒருவர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பெயிண்ட், சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளையும் செய்திருக்கிறார். இவருக்கு பலரும் உதவி செய்திருக்கிறார்கள்.
அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி ஆகிய படங்களை இயக்கியவரும், காமெடி நடிகருமான சிங்கம் புலிதான் இவரை சுந்தர் சியிடம் அறிமுகம் செய்து வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதுவும், கூட்டத்தில் நிற்கும் ஒரு சின்ன வேடம். நடிகராவதற்குக் முன்பு சினிமாவிலும் சூரி வேலை செய்திருக்கிறார். நடிகர்களுக்கு எடுபுடி வேலைகளையெல்லாம் இவர் செய்திருக்கிறார்.
பரோட்டா சூரி: சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சி சூரியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் ரசிகர்கள் அவரை பரோட்டா சூரி என அழைத்தார்கள். அதன்பின் விஷால், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சூரி நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுன் கூட்டணி போட்டு இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. வில்லேஜ் படம் என்றாலே ‘காமெடிக்கு சூரியை கூப்பிடு’ என இயக்குனர்கள் சொல்லுமளவுக்கு வளர்ந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் மதுரையில் அம்மன் என்கிற பெயரில் ஹோட்டல் தொழிலையும் துவங்கினார்.
விடுதலை: காமெடி நடிகராக இருந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக மாற்றினார். அந்த படம் ஹிட் அடிக்கவே இனிமேல் காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என அறிவித்தார் சூரி. அடுத்து வெளிவந்த கருடம் படம் நல்ல வெற்றியை பெற்றது. இடையில் கொட்டுக்காளி படம் வந்தாலும் அந்த படம் ஓடவில்லை. ஏனெனில், அப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் குறும்படம் போல இயக்கியிருந்தார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்தும் இருந்தார். அதன்பின் விடுதலை 2 படத்தை முடித்துவிட்டு இப்போது மாமன் என்கிற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
கொட்டுக்காளி: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கொட்டுக்காளி பட இயக்குனர் வினோத் ‘சூரி அண்ணன் இனிமேல் கொட்டுக்காளி போல ஒரு படத்தில் நடிக்க மாட்டார். அந்த படத்தை நம்பி அவ்வளவு உழைப்பை போட்டார். ஆனால், ‘கருடன் மாதிரி இல்ல. இந்த படத்தை அவர் ஏன் பண்ணார்?’ என பலரும் கேட்டார்கள். அப்படி இருக்கும்போது இனிமே எப்படி அதுமாதிரி ஒரு படத்தில் அவர் அடிப்பார்?’ என கோமாக கேட்டிருக்கிறார்.