என்ன இவ்வளவு குளோசா இருக்காங்க!.. அருண் விஜய்க்காக வந்த எஸ்கே.. முடிவுக்கு வந்த மோதல்!..

வணங்கான் இசை வெளியீட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு அருண் விஜய் குறித்து பேசியிருக்கின்றார்.

By :  Ramya
Update: 2024-12-19 05:01 GMT

sk-av

வணங்கான்:

பிரபல இயக்குனரான பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். பின்னர் இந்த படத்தில் அருண் விஜய் இணைந்த நிலையில் படம் எடுக்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலா:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் பாலா. இவரது திரைப்படங்கள் என்றாலே அதில் நடிக்கும் அனைத்து நடிகர்களின் உழைப்பையும் நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். அந்த அளவுக்கு நடிகர்களை பிழிந்து எடுத்து வேலை வாங்க கூடிய ஒரு இயக்குனர். அதற்கு ஏற்ற வகையில் இவரது படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.


பாலா 25:

வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜயை வைத்து படத்தை இயக்கினார் பாலா. இப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் காமாட்சியும் பாலாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நேற்று வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பாலா திரையுலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதால் இந்த நிகழ்ச்சியை பாலா 25 நிகழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

இதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். நடிகர் சிவகுமார், சூர்யா, மணிரத்தினம், சிவகார்த்திகேயன், மிஷ்கின், சமுத்திரகனி, வேதிகா, மன்சூர் அலிகான், நித்திலன் சுவாமிநாதன் மாரி செல்வராஜ், பாக்கியராஜ் என பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு மேடையில் பாலா குறித்து மிக பெருமையாக பேசி இருந்தார்கள்.

சிவகார்த்திகேயன் என்ட்ரி:

இதில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் சிவகார்த்திகேயன் வருகைதான். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் நடிகர் அருண் விஜய் குறித்தும் இயக்குனர் பாலா குறித்தும் மேடையில் பெருமையாக பேசி இருந்தார். அது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் சிவகார்த்திகேயன் மீதான மரியாதையை அதிகரித்து இருக்கின்றது.

அதற்கு காரணம் என்னவென்றால் சில வருடத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் படம் வெளியான சமயத்தில் அருண் விஜய் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் யார் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு என்று ட்விட் செய்திருந்தார். சிவகார்த்திகேயனை தான் அவர் கலாய்க்கிறார் என்று ரசிகர்கள் மாறி மாறி சமூக வலைதள பக்கங்களில் சண்டை போட்டு வந்தார்கள். அப்போது இந்த பிரச்சனை பெரும சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த விழாவில் பங்கேற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிவகார்த்திகேயன் பேச்சு:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்த வருடம் பொங்கலுக்கு 2 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 2 படங்களுமே முதல் எழுத்து v, v என்று ஆரம்பிக்கின்றது.  v என்றால் வெற்றி. இதனால் நிச்சயம் இரண்டு திரைப்படங்களுமே மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும். அடுத்த வருடம் நன்றாக தொடங்க வேண்டும் என்று வாழ்த்தி இருந்தார்.


மேலும் அருண் விஜய் குறித்து பேசிய சிவகார்த்திகேயன் 'அருண் விஜய் அண்ணன் தான் நீ கண்டிப்பாக இந்த விழாவுக்கு வரணும் தம்பின்னு கூப்பிட்டார். அருண் விஜய் அண்ணன் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்வது தான் அவரோட உண்மையான வெற்றியாக பார்க்கிறேன்' என்று அந்த மேடையில் பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.

Tags:    

Similar News