சந்தானம் ஹீரோவானதுக்கு இவர்தான் காரணமா? இவர் சொன்ன ஐடியா எப்படி வொர்க் அவுட் ஆகுது பாருங்க
மதகஜராஜா திரைப்படத்திற்கு பிறகு சந்தானத்தின் காமெடியை அனைவரும் மிஸ் பண்ணுகிறார்கள். இத்தனை வருடம் காமெடியில் இருந்து ஒதுங்கி ஹீரோவாகவே நடித்த வந்த சந்தானம் இந்த படத்திற்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றது. விஷால் சுந்தர் சி கூட்டணியில் தயாராகும் திரைப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வந்து கொண்டு இருக்கின்றது .
இன்னொரு பக்கம் சிம்புவின் ஒரு படத்திலும் அவர் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் மன்மதன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். அவரை இந்த சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது சிம்பு. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சிம்பு நடித்த படங்களில் எல்லாம் சந்தானத்தை பார்க்க முடிந்தது.
அவரின் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது. விஜய் அஜித் சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தன்னுடைய காமெடியால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் சந்தானம். நாகேஷ் ,வடிவேலு ,விவேக் அவர்களுக்கு அடுத்தபடியாக சந்தானத்தின் காமெடியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இப்பொழுது ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகர் ஸ்ரீநாத், அதாவது விஜயின் நண்பர் ஸ்ரீநாத் சந்தானத்தை பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு சந்தானம் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நான் தான் வேண்டாம் என சொன்னேன். ஏனெனில் அந்த காலத்தில் ஹீரோவுக்கு நண்பனாக ,மச்சானாக தொடர்ந்து எல்லா ஹீரோக்களின் படங்களிலும் அவர்தான் நடித்து வந்தார்.
அதனால் இந்த ஒரு கேரக்டர் உனக்கு ஒரு பெரிய பிளஸ். தூள் கிளப்பிக் கொண்டு இருக்கிறாய். அதனால் இப்பொழுது வேண்டாம். கொஞ்ச நாள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என நான் தான் சொல்லி அவரின் ஹீரோ ஆசையை நிறுத்தி வைத்தேன். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் கதை அவர் காதுக்கு வர அதில் கதையின் நாயகனாக மாறினார் சந்தானம்.
ஆனாலும் நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை நீதான் இயக்க வேண்டும் என என்னிடம் சத்தியம் செய்தார். அதை அப்படியே செய்தும் காட்டினார் என ஸ்ரீநாத் கூறினார். ஏனெனில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் தான் சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படம். அதை இயக்கியது ஸ்ரீநாத் என்பது குறிப்பிடத்தக்கது.