தினமும் ஒரு பொம்பள.. அப்பா கேரக்டரால இப்படி ஆயிட்டேன்.. சோனா வாழ்க்கையில் இவ்ளோ போராட்டமா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ கிளாமர் நடிகைகள் வந்து போயிருக்கின்றனர். அதில் சில பேர் ஜெயித்திருக்கிறார்கள் .சில பேர் ஏன் சினிமாவிற்கு வந்தோம் என்ற அளவுக்கு யோசித்து இருக்கிறார்கள். அந்த வகையில் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனா அந்த படத்தில் மிகவும் ஸ்லிம்மாக கிட்டத்தட்ட ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். அது இப்போது பார்த்தால் கூட இதுதான் சோனா வா என்று அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியாது.
வையாபுரிக்கு ஜோடியாக அந்த படத்தில் சோனாவை சித்தரித்து இருப்பார்கள். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கிளாமராக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாற்றியது இந்த சினிமா. இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்ப நிலைமையையும் தன் அப்பாவை பற்றியும் கூறி இருக்கிறார். அவருடைய பூர்வீகம் பாண்டிச்சேரி தான். அப்பா பிரிட்டிஷ் ஜெர்மனி சேர்ந்த ஒரு நபர் என்றும் அம்மா ஸ்ரீலங்காவை சேர்ந்த பெண் என்றும் கூறினார். அதனால் நான் எந்த கேட்டகிரி என்பது எனக்கு தெரியாது .
ஆனால் நான் பிறந்தது எல்லாமே பாண்டிச்சேரியில் தான். அதன் பிறகு படிப்புக்காக சிறு வயதிலேயே சென்னை வந்ததாக அந்த பேட்டியில் கூறினார் .14 வயதிலேயே நடிக்க வந்து விட்டாராம் சோனா. அந்த நேரத்தில் சினிமாவைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாத வயது எனக்கு என்றும் கூறினார். அதனால் அந்த வயதில் தாத்தா வயதுடைய ஒருவர் தன்னிடம் இரட்டை வார்த்தைகளில் பேசி கூட அழைத்து இருக்கிறார் என்றும் கூறினார்.
தன் அப்பாவை பற்றி சோனா கூறும் பொழுது அவருடைய குணமே ஒரு சரியில்லாத கேரக்டர். தினமும் என்னுடைய பாட்டி வீட்டில் பஞ்சாயத்து நடக்கும் .அதில் ஒரு பக்கம் என் அப்பா நிற்பார். இன்னொரு பக்கம் தினமும் ஒரு பெண் வந்து நிற்பார். ஏனெனில் பெண்களிடம் தப்பான சகவாசம் கொண்டவராக என் அப்பா இருந்தார். அதனாலேயே என் அம்மா மிகவும் சிரமப்பட்டார். ஒரு கட்டத்திற்கு மேலாக என்னுடைய அப்பா எங்களை விட்டு போக என் அம்மா தனி ஆளாக இருந்தார் .அதிலிருந்து என் அம்மா பாவம் .அவருக்காக நாம் இருக்க வேண்டும் என இப்போது வரை அம்மா அம்மா என்றே அவருக்காகவே நான் வாழ்ந்து விட்டேன்.
14 வயதிலேயே ஒரு ஆண்மகனைப் போல என்னுடைய சூழ்நிலை என்னை மாற்றியது என்றும் கூறினார் சோனா. அது மட்டும் இல்லாமல் என்னை என்னுடைய அப்பா எப்பொழுதுமே உன்னுடைய கேரக்டர் சரியில்லை என்று சொல்லியே தான் என்னை வளர்த்து வந்தார். அதனாலையே சில தவறான விஷயங்கள் நான் பண்ணும் பொழுது எனக்கு அது தவறாகவே தெரியவில்லை.
என் அப்பாவே என்னை தப்பானவள் என்ற சொல்லும் போது மற்றவர்கள் கூறினால் நமக்கு என்ன என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது .அதனால் தான் பார்ட்டி, குடி ,குத்தாட்டம் என அந்த மாதிரி விஷயங்களில் நான் மாட்டிக் கொண்டேன் என்று சோனா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட்டும் என்னை விட்டுவைக்கவில்லை. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இவர்களை தாண்டி தயாரிப்பாளர்களும் இதை விரும்பினார்கள்.
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஹீரோயினாக வேண்டும் என்றால் கிளாமர் காட்டி அப்படி நடித்துவிட்டு போய்விடலாம் என்று யோசித்ததால்தான் கிளாமர் நடிகையாகவே மாறினேன். ஆனால் இப்பொழுது தான் நான் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதுதான் வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற புரிதலுக்கு நான் வந்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் சோனா.