அடையாளமே தெரியலயே... ஷாப்பிங் மால் வந்த கனகா... என்ன கொடுமைடா சாமீ!

கண்களாலே கட்டிளங்காளையர்களை வளைத்துப் போடும் கனவுக்கன்னியா இது...?!

By :  sankaran
Update: 2024-09-22 06:59 GMT

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. ராமராஜனுடன் இவர் இணைந்து நடித்த கரகாட்டக்காரன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும். அந்த அளவு படத்தில் அத்தனை விஷயங்களும் கனகச்சிதமாக வந்திருக்கும். இந்தப் படத்தில் கனகா அற்புதமாக நடித்திருந்தார்.


ராமராஜன், கனகா ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆனது. கனகா விஜயகாந்துடன் இணைந்து நடித்த படம் கோயில் காளை. இந்தப் படத்திலும் அவரது நடிப்பு சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் பள்ளிக்கூடம் போகலாமா பாடல் இப்போது பார்த்தாலும் ஒரு கிக்கை ஏற்றிவிடும்.

சரத்குமாருடன் இணைந்து நடித்த சாமுண்டி படம் சக்கை போடு போட்டது. கிளாமராக நடித்தாலும் கனகா பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடிகர் விவேக்கிற்கு ஜோடி இவர் தான். பிரபுவுடன் இவர் நடித்த கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேட்குதம்மா, பெரிய குடும்பம் படங்கள் மாஸ் காட்டின.

சரத்குமாருடன் சிம்மராசி, சாமுண்டி படங்கள் சூப்பர். விஜயகாந்துடன் சர்க்கரை தேவன், கோயில் காளையும், மம்முட்டியுடன் நடித்த கிளிப்பேச்சு கேட்கவா, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த அதிசயப்பிறவி படங்கள் எல்லாம் கனகாவின் ஆரவாரமான நடிப்பைப் பறைசாற்றின.

கன்னத்தில் குழி விழும் அழகிய சிரிப்புக்குச் சொந்தக்காரி. கண்களோ மீன் போன்று அழகானவை என அப்போது இவரது அழகைப் பற்றி பத்திரிகைகள் புகழந்து தள்ளியது 90ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தான் தெரியும். அப்படிப்பட்ட நடிகை திடீரென எங்கே போனார்? என்ன ஆனார் என்பது புரியாத புதிராக இருந்தது. காணாமல் போய்விட்டார்.

அதன்பிறகு சொந்த பிரச்சனை காரணமாக வீட்டை விட்டே வெளியில் வருவதில்லை என்றும் சொல்லப்பட்டது. இயக்குனர் கங்கை அமரன் கூட நேரில் போய் அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல முயற்சித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.

தற்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. ஷாப்பிங் மாலுக்கு விசிட் அடித்துள்ளார். ஆனால் பார்க்கும்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார். எங்கே அந்தக் கனவுக்கன்னி என தேடிப் பார்க்க வேண்டியுள்ளது. அவரா இவர்? என்னடா காலக்கொடுமை என்றே எண்ண வேண்டியுள்ளது.

Tags:    

Similar News