‘ஜனநாயகன்’ படத்துல என் கேரக்டர்! பகவந்த் கேசரி படம்தானா? பிரியாமணி சொன்ன தகவல்
priyamani
விஜய் நடித்து அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் விஜய் ,மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே என முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் தான் ஜன நாயகன். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார் .இது விஜய்க்கு கடைசி படம். படப்பிடிப்பை முடித்ததும் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிக் கொண்டார் விஜய்.
சமீபத்தில் கூட காவலாளி அஜித் குமார் வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தார். கூடவே 2 லட்சம் நிவாரண தொகையாகவும் வழங்கினார் விஜய். இப்படி அரசியல் சார்ந்த பணிகளை கவனித்து வரும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.
அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து எப்படியாவது இவர் இந்த நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என மக்கள் கூறி வருகிறார்கள் .இன்னொரு பக்கம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் என மாணவர்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார் .இப்படி அரசியலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருகிறார் விஜய்.
இந்த நிலையில் ஜன நாயகன் படத்தை பற்றிய கேள்விக்கு நடிகை பிரியாமணி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்தில் பிரியாமணி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது குட் வைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவரிடம் ஜனநாயகன் படத்தில் என்ன மாதிரியான கேரக்டர் என்று கேட்டனர்.
அதற்கு பிரியாமணி அது இப்போது கூறமுடியாது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றது. அதை ஜனநாயகன் படத்தை பற்றி பேசும்போது நான் கூறுகிறேன் என கூறினார் .அந்தப் படம் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்கா என்ற கேள்விக்கு இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் .படத்தின் இயக்குனர் எச் வினோத்திடம் கேளுங்கள். நான் சொல்ல முடியாது என கூறினார் .
vijay
உங்களுடைய கேரக்டர் பற்றி ஒரு டிப்ஸ் ஆவது சொல்லுங்களேன். என்ன மாதிரி நடிக்கிறீங்க என்று மறுபடியும் நிரூபர் கேட்டதற்கு அருகில் இருந்த நடிகர் ஆரி ‘ஜனநாயகன் படத்தில் என்னவா நடிக்கிறாங்க? அது தானே உங்களுக்கு தெரியணும் .அவர் ஒரு ஆர்டிஸ்ட்டாக நடிக்கிறார்’ என்ற மொக்கை ஜோக்காக பதில் கூறினார்.