என்னை பார்க்க இங்க ஏன் வறீங்க?!..... தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்த அஜித்

By :  ROHINI
Published On 2025-05-24 12:52 IST   |   Updated On 2025-05-24 13:21:00 IST

ajithrace

அஜித் தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் தனியாக ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்து இருக்கிறார். அது இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது .அதிலிருந்து தன்னுடைய ரேஸ் குறித்த எல்லா அப்டேட்டுகளையும் அதில் ரசிகர்கள் பார்க்க முடியும். தற்போது அஜித் கார் ரேஸ் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒரு நடிகராக அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு ரேஸராக அஜித்தை எப்போது நாம் நேரடியாக காணப் போகிறோம் என்ற ஒரு ஆர்வம் இருந்து வந்தது. ஒரு சில ரசிகர்களால் அதை நேரில் போய் பார்க்க முடியும். சில ரசிகர்கள் அதை நேரில் போய் பார்க்க முடியாது. ஏனெனில் கார் ரேஸ் அனைத்துமே வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

துபாயில் நடந்த ரேஸில் கூட அவரை பார்ப்பதற்காக இங்கிருந்து பல ரசிகர்கள் மெனக்கிட்டு பணம் செலவழித்து பார்க்க சென்றனர். அங்கு அவருக்கு ஆதரவுகளை கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது கண்டமிட்டு கண்டம் தாண்டி நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் இங்குள்ள ரசிகர்களால் அதைப் பார்க்க முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதை மனதில் வைத்து அஜித் தற்போது நேரலையில் இருந்து தன்னுடைய ரேஸை அனைவரும் பார்க்கும் வகையில் தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து இருக்கிறார்.

மிசானோ என்ற இடத்தில் இப்போது கார் ரேஸ் நடைபெற்று வருகிறது. அதன் விவரத்தையும் அந்த youtube லிங்கையும் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இனிமேல் ரசிகர்கள் அந்த youtube சேனல் மூலமாக அஜித்தின் ரேஸ் பற்றிய அப்டேட்டுகளை பார்க்கலாம் என்றும் சுரேஷ் சந்திரா அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சமீபகாலமாக தொடர்ந்து அஜித் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டுதான் வருகிறார். இப்போது இந்த யூடியூப் சேனல் மூலமாகவும் ரசிகர்கள் எந்தளவுக்கு தன் மேல் அன்பை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இது உதவும் .

இந்த வீடியோவை காண: https://www.youtube.com/live/AhECo780l4E?si=p30O9fGVQVXiEwBX



Tags:    

Similar News