இனிமே இந்த ஹெல்மெட்தான் டிரெண்ட்! ரேஸுக்கு தயாராகும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்த அஜித்தின் புகைப்படங்கள்

By :  rohini
Update: 2024-09-27 12:26 GMT

ajithrace

கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அஜித் நடித்த திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல ஒரு ஓபனிங் இருந்து வருகிறது. ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியான நிலையில் அஜித் விஜய் இருந்து வருகிறார்கள். தொழில் முனையில் விஜய் அஜித் இவர்களுக்கு இடையே தான் கடுமையான போட்டியும் நிலவி வருகிறது

சினிமா அவருடைய தொழில் என்றாலும் அவருடைய பேஷன் ரேஸ் தான். பைக் ரேஸ் கார் ரேஸ் என தன்னுடைய முழு ஆர்வத்தையும் அதில் தான் காட்டி வருகிறார் அஜித்.




 


உலகில் உள்ள பல இடங்களுக்கு தன்னுடைய பைக்கிலேயே பயணம் செய்து வருகிறார் அஜீத். இந்தியா முழுக்க சுற்று பயணம் செய்து முடித்த அஜித் அடுத்ததாக உலக அளவில் தன்னுடைய பைக் பயணத்தை ஆரம்பித்தார். தற்போது படங்களிலும் நடித்து வருவதால் இப்போது பைக் சுற்று பயணத்திற்கு சிறிது நாட்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார் அஜித்.




 


விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என்ற ஒரு செய்தி வெளியானது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் முழுமூச்சாக நடித்து வருகிறார் அஜித்.

குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் துபாயில் நடக்க போகும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.




 


அது சம்பந்தமான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தி வருவதற்கு முன்பே அஜித் துபாயிலேயே தங்கி இருந்து சொகுசு கார்கள் வாங்குவது கார் ரேஸ்களில் கலந்து கொள்வது என கவனம் செலுத்தி வந்தார்.

பிரபல கார் பந்தய வீரரான நரேன் அவருடைய எக்ஸ் தளத்தில் அஜித் துபாயில் நடக்க போகும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்ட பிறகுதான் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.




 


அதுவும் சமீபத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் இந்த கார் பந்தயத்திற்காக அஜித் எப்படி எல்லாம் தன்னை தயார்படுத்தி கொள்கிறார் என்ற வகையில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல ஒரு புதிய ஹெல்மெட்டையும் அறிமுகப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளை சிவப்பு நிறத்திலான அந்த ஹெல்மெட்டின் டிசைன்  மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த கார் பந்தையத்தின் மூலமாக இந்த ஒரு புதிய ஹெல்மெட் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என சுரேஷ் சந்திரா அவருடைய எக்ஸ்ள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News