நாய் பத்தி மட்டும் கேளுங்க!.. அஜித் குறித்த கேள்வி.. எதிர்பாரா பதிலை சொன்ன தம்பி..!

By :  Ramya
Update: 2025-02-02 03:56 GMT

Actor Ajith: தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் உயர்ந்து நிற்கின்றார் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலம் இருக்கின்றது. இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இவரது நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை.

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக அவரின் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. துணிவு திரைப்படத்தை முடித்து கையோடு நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.


இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எடுத்து முடிப்பதற்கு தாமதமானது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. சரி இந்த பொங்கல் பண்டிகைக்காவது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி தொடங்கி நடிகர் ஆரவ், ரெஜினா என அனைவரும் புரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பத்மபூஷன் அஜித்: நடிகர் அஜித் தான் கமிட் செய்திருந்த படங்களின் வேலைகள் அனைத்தையும் கடந்த டிசம்பர் மாதத்தோடு முடித்துவிட்டு ஜனவரி மாதத்தில் இருந்து கார் ரேஸில் பங்கு பெறுவதற்கு தேவையான வேலைகளை கவனித்து வருகின்றார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை வென்றிருந்தார்.

தொடர்ந்து இந்த வருடத்தின் 9 மாதங்கள் கார் ரேஸில் பங்குபெற இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் என அனைவரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் தம்பி பேட்டி: நடிகர் அஜித்துக்கு அனில் குமார் என்கின்ற தம்பி ஒருவர் இருக்கின்றார். இவருக்கும் சினிமாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் jodi 365.com என்கின்ற மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நாய் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனில் குமார் நாய்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி இருந்தார்.


நாய்களை எப்படி பராமரிக்க வேண்டும்,  வளர்க்க வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அனில் குமார் நாய்கள் குறித்து கேள்வி கேளுங்கள் பதில் சொல்கின்றேன் என்று கூறியிருந்தார். இதனை செய்தியாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் பத்மபூஷன் விருது குறித்து கேள்வி எழுப்பிய போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Tags:    

Similar News