பணம் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டியடித்த இசைஞானி!.. இந்த மனுஷனயா திட்றீங்க!...

By :  Murugan
Update: 2025-02-02 04:20 GMT

Ilayaraja: இளையராஜா சரியாக புரிந்துகொள்ளப்படாதவர். பலருக்கும் அவர் மீது தவறான இமேஜ் இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவரின் நேரத்தை வீணடிக்கக்கூடாது. அவரிடம் நம்மை அறிவாளி போல காட்டிக்கொள்ளக்கூடாது.. அவ்வளவுதான்’ என சமீபத்தில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சொல்லியிருந்தார். இதுதான் இளையராஜாவை புரிந்து கொண்டவர்கள் சொல்வது.

இளையராஜாவின் கோபம்: இளையராஜா மிகவும் கோபக்காரர், தலைக்கணம் கொண்டவர், திமிறு பிடித்தவர், தற்பெருமை பேசுவர் என பலரும் நினைப்பார்கள். ஆனால், அது எல்லாவற்றுக்கும் அவர் தகுதியானவர் என்பதை மறந்துவிடுவார்கள். ஒரு சின்ன விஷயத்தை செய்து முடித்துவிட்டாலே பலருக்கு திமிறும், தலைக்கணமும் வந்துவிடுகிறது.

இளையராஜா கடந்த 50 வருடங்களாக தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது. பலரின் கார் பயணங்களில் அவரின் இசையே வழித்துணையாக இருக்கிறது. பலருக்கும் நம்பிக்கையாகவும், ஆறுதலாகவும் இப்போதும் அவரின் இசை இருக்கிறது.


ராஜாவின் இசையே மருந்து: அவரின் இசையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஒருமுறை ராஜாவின் கார் ஒரு சிக்னலில் நின்றபோது அவரின் காருக்கு முன்னே நின்ற ஆட்டோக்காரர் ஒருவர் ராஜாவை பார்த்துவிட்டு ஓடி வந்து ‘சார் உங்க பாட்டு மட்டும் இல்லனா என் பொண்டாட்டியை அடிச்சே கொன்னுறுப்பேன்’ என சொல்லியிருக்கிறார். இளையராஜாவின் இசை செய்தது இதுதான்.

அதேபோல், அவர் ஏதோ பண விஷயத்தில் கறாராக இருப்பார் என பலரும் நினைக்கிறார்கள். தனது பாடல்களுக்கு அவர் காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோதும் அவரை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இது எதற்கும் அவர் விளக்கமளிக்கவில்லை. இதையெல்லாம் நான் பார்ப்பதே இல்லை. நான் என் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் இளையராஜா.

சம்பளத்திற்கு பதில் தாலி: பல படங்களுக்கு அவர் சம்பளமே வாங்காமல் இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது ‘பணம் எனக்கு முக்கியமில்லை. அவனிடம் பணம் இல்லை என தெரியும்போது இலவசமாகவே இசையமைத்து கொடுத்திருக்கிறேன். ஒருமுறை எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்காக மனைவியின் தாலியை எடுத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளர் வந்தார். அவரை வீட்டிலிருந்து வெளியே விரட்டிவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார் இளையராஜா.

Tags:    

Similar News