அனிருத்தே இந்த வேலைய செஞ்சிருக்காரு! அப்போ நம்மலாம் பண்ணா தப்பே இல்லை!
Anirudh: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் சமீபத்தில் சொல்லி இருக்கும் ஆச்சரிய அப்டேட்டால் தற்போது ரசிகர்கள் இவரே இப்படிதானா அப்போ நாங்களும் செய்யலாம் தானே எனக் கலாய்த்து வருகின்றனர்.
3 படத்தின் இசை மூலம் பிரபலம் அடைந்தவர் அனிருத். அதை தொடர்ந்து அவரும் தனுஷும் இணைந்து பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தனர். அது தனுஷின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அனிருத்தின் இசை கேரியரையும் வளர்த்துவிட்டது.
பெரிய உச்சத்தில் இருந்த நிலையில் அனிருத் மற்றும் தனுஷ் பிரிந்தனர். அதையடுத்து பல ஆண்டுகள் முடிந்தாலும் இன்னும் இருவரும் இணையவில்லை. ஆனால் அனிருத் வேறு ஒரு உயரத்திற்கு சென்று விட்டார். தமிழ் தொடங்கி பல மொழிகளில் இசையமைத்து வருகிறார்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹிட் பிரபலத்தின் சமீபத்திய படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் தொடங்கி அடுத்து ஜெயிலர் 2 வர இருக்கும் நிலையில் எல்லா படங்களுக்குமே அனிருத்தின் இசையாகதான் அமைந்து விட்டது.
தற்போது கூலி படத்தின் இசையமைப்பு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் மெட்ராஸி, விஜயின் ஜனநாயகன் என பிஸியாக இருக்கிறார். அந்த இசையமைப்பு பணியில் இருக்கும் போது ஒரு பாடலுக்கான இரண்டு வரிகள் சரியாக செட்டாகவில்லையாம்.
உடனே அனிருத் சாட் ஜிபிடி பீரிமியத்தை சப்ஸ்கிரைப் செய்து விட்டு மொத்த பாட்டையும் போட்டு ஒரு இரண்டு வரி வேண்டும் எனக் கேட்டாராம். அதில் 10 வரி கிடைக்க உடனே அனிருத் அதை தன்னுடைய பாடலுக்கு பயன்படுத்தி இருப்பதாக அவரே தெரிவித்து இருக்கிறார்.
தற்போது ஏஐ அதிகரித்து வரும் நிலையில் எல்லாருமே தேவையான விஷயங்களுக்கு சாட் ஜிபிடியை தான் நாடி வருகின்றனர். ஆனால் கடைசியில் பிரபலமான அனிருத்துக்கே இந்த நிலைமை நடந்து இருப்பது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.