பழைய பார்முலா கைகொடுக்காது மிஸ்டர் ஷங்கர்... கேம் சேஞ்சர் வேற எதைச் சொல்லுது?

By :  Sankaran
Update: 2025-01-04 08:39 GMT

கேம்சேஞ்சர் டிரைலரைப் பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி தான் தோணுது. உங்களுக்கு என்ன தோணுது என ஆங்கர் ஒருவர் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனனிடம் கேட்க அவர் சொன்ன பதில்தான் இது.

கமல், ரஜினியே தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டு இளம் நடிகர்களோடு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க தான் புதுசு புதுசான வார்த்தைகளைப் போடுறாங்க. அதுக்குத்தான் டிமாண்ட் இருக்கு. இன்னைக்கு இளைஞர்கள் அந்த வார்த்தையைத்தான் புழக்கத்தில் வச்சிருக்காங்க. ஆனா அவங்களோடு சேர்ந்தாதான் தெரியும்.

ஆனா ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் இன்னும் பழைய பார்முலாவையே பிடிச்சிக்கிட்டு இருக்காங்க. கேம் சேஞ்சர் படத்தைப் பார்க்கும்போது இன்னும் ஜென்டில்மேனையோ, முதல்வனையோ, இந்தியனையோ தான் பார்க்க முடியுது. இதுல வேற என்ன வித்தியாசத்தைக் கொடுத்து இருக்கீங்க? வெறும் பிரம்மாண்டத்தை வச்சி எல்லாம் படத்தை ஓட வைக்க முடியாது.

அது பழைய காலம். முதல்ல ஒரு பேஸ் வேணும். அது மேலத்தான் பிரம்மாண்டத்தை வைக்கணும். அந்த பேஸ் பழசா இருந்தா அது எடுபடாது. கேம் சேஞ்சர்ல வேற என்ன வித்தியாசத்தைக் கொண்டு வந்துருக்கீங்க என்று கேள்வி எழுப்புகிறார் அந்தனன்.

game changer

உங்களோட பழைய படங்கள்ல இருந்து கேரக்டர மட்டும் மாத்திருக்கீங்க. அதுதான இதுல தெரியுது. அப்போ இது என்னவா வரும்னு நமக்கு நம்பிக்கை இல்லாம இருக்கு. இன்னொன்னு பிரம்மாண்டம்கறது எடுபடாது. எளிமையான கதையிலேயே ஜெயிச்சிட்டுப் போயிடலாம்.

வெறும் பிரம்மாண்டத்தை வச்சே ஓட்ட முடியும்கறது எல்லாம் பழைய காலம். இன்னைக்கு அது எடுபடவே எடுபடாது. இப்போ ஷங்கரோட கேம் சேஞ்சர் என்னவா வரப்போகுதுன்கற அச்சமும் நமக்கு இருக்கு.

இந்தியன் 2ல பெரிய விமர்சனமா சொன்னது வசனங்கள். அது பெரிசா கனெக்டாகலன்னாங்க. அந்த வகையில் கேம் சேஞ்சரிலும் வசனங்கள் வருது. காமெடி சீன்ஸ் வருது. எதுக்காக அது வருதுங்கற மாதிரிதான் இருந்துச்சு. அதுல குறிப்பா வந்து நீ 5 வருஷத்துக்கு மட்டும்தான் மினிஸ்டர். ஆயுசுக்கும் நான் ஐஏஎஸ்.னு சொல்றாங்க. அது ரொம்ப மாஸா இருக்குற மாதிரி காட்டுறாங்க.

ஆனா அது பெரிசா எதுவும் கனெக்டாகல என ஆங்கர் அந்தனனிடம் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலைப் பாருங்க. அது வந்து அண்ணா காலத்துல உள்ளது. பேர் சொல்ல விரும்பல. ஒரு தலைவர் காரை விட்டு இறங்கவே இல்லையாம். ஏன்னா ஐஏஎஸ் அதிகாரி வந்து கதவைத் திறக்கணுமாம். இது அண்ணா காதுக்குப் போகுது.

நாளைக்கு அவன் நினைச்சான்னா உன் இடத்துக்கு வந்துடுவான். ஆனா நீ நினைச்சாலும் அவன் இடத்துக்குப் போக முடியாது. அதுக்கு நிறைய படிக்கணும்பா. அதுக்கு முதல்ல அதிகாரிகள மதிக்கக் கத்துக்கன்னு சொல்றாரு. அப்படி ஒரு தகவல் உண்டு. அதைப் பல படங்கள்ல வச்சிட்டாங்க. இப்ப கொண்டு வந்து அதை வைக்கும்போது எவ்ளோ காலம் பின்னால இருக்குங்கறதுதான் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News