குடும்பத்தைக் கவனிக்கறதை விட என்ன வேலை? கீர்த்தி கீர்த்தி...ன்னு அலையறாரே விஜய்.. பிரபலம் விளாசல்!

By :  Sankaran
Update: 2025-01-17 06:11 GMT

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான தளபதி விஜய் இப்போது அரசியலையும், சினிமாவையும் ஒரு சேர கவனிக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து அவர் செய்யும் பல செயல்கள் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. வெள்ள நிவாரணப் பொருள்களை பனையூரில் கட்சி அலுவலகத்திலேயே கொடுத்தது, கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் கலந்து கொண்டதுன்னு பல சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

கீர்த்தி சுரேஷ் பொங்கல்: இந்த நேரத்தில் பொங்கலை கீர்த்தி சுரேஷ் வீட்ல போய் கொண்டாடி இருக்கிறார். இது குறித்து உங்க கருத்து என்னன்னு வலைப்பேச்சாளர் அந்தனனிடம் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

எல்லாருமே கேள்வி கேட்கத்தான் செய்வாங்க. எல்லாரும் பொங்கலை அவங்க அவங்க வீட்ல தான் கொண்டாடுவாங்க. இவரு மட்டும் வித்தியாசமா இன்னொருத்தர் வீட்ல போய் கொண்டாடுனா கேள்வி கேட்கத்தானே செய்வாங்க. இதுக்கு வந்து முறையான பதில் சொல்லணும். அவர் பதில் சொல்ல மாட்டாருன்னு வச்சிக்கோங்க. ஆனா இந்தக் கேள்வியாவது விஜய் காதுக்குப் போகணும்.


அரசியல் கட்சி ஆரம்பிச்சி மாவட்டச் செயலாளர் கூட்டம் போட்டு அதுக்கான காணொலியும் வரல. அந்த மாவட்ட செயலாளர்கள் கூட பொங்கல் கொண்டாடுனா கூட வேற லெவலுக்குக் கொண்டு போயிருக்கும். அதை விட்டுட்டு கீர்த்தியோட கொண்டாடுறது எல்லாம் அபத்தம்.

இமேஜ் முக்கியம்: ஏன்னா அரசியல் தலைவர்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். இந்த ஒரு கேள்வி ஆயிரம் கேள்விகளாக மாறும். அது லட்சங்களாக மாறும். இமேஜ் சரிவில் கொண்டு போய் விட்டுரும். விஜய்க்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது தெரிந்தும் இதுமாதிரி தவறுகளைத் தொடர்ந்து செய்றாரான்னு தெரியல.

அரசியல் தலைவராக மாறினதுக்குப் பிறகு வர்ற முதல் பொங்கல். அதை எப்படிக் கொண்டாடணும். தலப் பொங்கலப் போயி கீர்த்தி சுரேஷ் கூட கொண்டாடுறாரே. இந்த ஸ்டில்லோ வீடியோவாவது வெளிய வராமயாவது பார்த்துக்கணும். இவருக்கு யாரும் சொல்றதும் இல்ல.

கோஷ்டி பூசல்: அவருக்கும் தெரியல. தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு. இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு. ஓடிப் போயிடும். இன்னைக்குக் கோஷ்டி பூசல்ல கையை வச்சாத்தான் எலெக்ஷன் வரும்போது சாதகமான எலெக்ஷனை சந்திக்க முடியும். எதுவுமே பண்ணாம கீர்த்தி சுரேஷ் வீட்ல போய் பொங்கல் வைக்கிறாரு.

கோமாளிகள் கூடாரம்: காமெடியா இருக்கு. உங்க குடும்பத்தோடு பொங்கலைக் கொண்டாடணும். அதுதான் தலைப்புச் செய்தியா வரும். உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. குழந்தைகள் இருக்கு. புஸ்ஸி ஆனந்த் கூட கோமாளிகள் கூடாரமாக மாறப்போகுதுன்னு சொல்ற அளவுக்கு விமர்சனம் வச்சிருக்காரு. அப்போ அதிரடியா விஜய் ஒரு முடிவை எடுக்கணும்.

2 சதவீதம்: இது அறிவார்ந்த கூட்டமா மாற்ற வேண்டிய வேலை முதல் பிரச்சனையா இருக்கு. ஆனா எதுவுமே பண்ணாம இருந்தா 2 சதவீதத்தை நோக்கித்தான் கட்சி போகும். புஸ்ஸி ஆனந்தோட இந்த ஆடியோவே விஜய் காதுக்குப் போகணும்னுதான் நினைக்கிறாரு. ஏதோ ஒரு உள்குத்து நடந்துருக்கு.

80 ஆயிரம்: ஒருவர் வேட்பாளராக 80 ஆயிரம் வாங்குறாங்களாம். ஆரம்பகாலத்துல இருந்து நாங்க போஸ்டர் ஒட்டுனதுதான் மிச்சம்னு பெரிய கூட்டம் ஒண்ணு வெளியில கதறிக்கிட்டு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News