மதராஸி படத்தின் கதை இதுதான்!.. செம மேட்டரை கையில் எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!..

By :  Murugan
Update:2025-02-18 15:58 IST

Madharasi: தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து விஜயகாந்தை வைத்து ரமணா படம் எடுத்தார். இந்த படத்தில் அவர் தொட்ட கதைக்களம் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும், விஜயகாந்த் ஏற்ற வேடம் வித்தியாசமாக இருந்தது.

கஜினி & ஏழாம் அறிவு: சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் சிரஞ்சீவை வைத்து ஸ்டாலின் என்கிற படத்தையும் இயக்கினார். கஜினி படத்தை அமீர்கானை வைத்து ஹிந்தியில் எடுத்தார். சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு படத்தை எடுத்தார்.

துப்பாக்கி: முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் விஜய்க்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. இப்போது வரை விஜய் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படமாக இப்படம் இருக்கிறது. அதேபோல், விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

முருகதாஸின் தோல்விப்படங்கள்: அதேநேரம், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் வெற்றிபெறவில்லை. எனவே, கடந்த 4 வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதன்பின்னர்தான் சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கினார்.


மதராஸி: சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டார் முருகதாஸ். இந்த வீடியோவை பார்த்தபோதே இது ஒரு பக்கா ஆக்சன் படமென தெரிந்தது. படத்தின் தலைப்பு மதராஸி எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் சென்னையை சேர்ந்தவர்களை மதராஸி என அழைப்பார்கள். எனவே, இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய முருகதாஸ் ‘வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதைத்தான் இந்த படத்தில் காட்டியிருக்கிறேன். வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் மதராஸி வார்த்தையையே இந்த படத்திற்கு அந்த தலைப்பை வைத்திருக்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News