பீப் சாங் சர்ச்சையில் என்னை காப்பாத்தியதே இவருதான்… தக் லைஃப் மேடையிலேயே பீல் பண்ண சிலம்பரசன்
Silambarasan: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய எதிர்பார்ப்பே தக் லைஃப் படத்தின் ரிலீஸ் குறித்துதான். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் சிம்பு பேசிய விஷயங்களும் வைரலாகி வருகிறது.
டி.ராஜேந்தரின் மகனாக சினிமாவிற்கு வந்தாலும் தனக்கான இடத்தினை உருவாக்கி கொண்டவர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமல்லாமல் பாடுவது, டான்ஸ் என அவர் ரூட்டே தனியாக சென்றது. ஒரு கட்டத்தில் வல்லவன் படத்தினை இயக்கியும் ஆச்சரியம் கொடுத்தார்.
ஆனால் அதுவே கடைசி அந்த படத்திலேயே நயன்தாராவுடன் காதல் கிசுகிசு கசிந்தது. இருவரும் ஓவர் ரொமான்ஸ் செய்து சுற்ற ஒருகட்டத்தில் பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்தனர். அந்த சமயம் வளர்ந்து வந்த சிம்பு திடீரென சினிமாவில் இருந்து பெரிய கேப் விட்டார்.
மேலும் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர். இருந்த படங்களுக்குமே சரியாக ஷூட்டிங் செல்லாமல் முரண்டு பிடிக்க அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய கெட்டப்பெயரே உருவானது. ஒரு கட்டத்தில் அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.
பெரிய போராட்டத்துக்கு பின்னர் மாநாடு படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். இதில் கிடைத்த பெரிய வாய்ப்பாக தக் லைஃப் படத்தில் கமல்ஹசனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார் சிம்பு.
அப்போது அவர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் தனக்காக செய்தது குறித்து பேசி இருக்கிறார். எனக்கு ரெட் கார்ட் போடப்பட்ட சமயத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் எனக்கு மணி சார் வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வனிலும் என்னை அழைத்தார்.
இப்போது மீண்டும் எனக்கு தக் லைஃபில் வாழ்க்கை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பீப் சாங் என்ற பாடல் வெளியாகி பெரிய பிரச்னையில் நான் சிக்கி தவித்த போது ஏ.ஆர்.ரஹ்மான் சார் அவராக முன் வந்து இதை சரி செய்ய வேண்டும் என்றே தள்ளி போகாதே பாடலை உடனே வெளியிட சொல்லி இசையமைத்து கொடுத்தார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.