இனி வடிவேலுவை நம்பி பிரயோஜனம் இல்லை போல... ஏறுமுகத்தில் தலைவன் தலைவி!
விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவியும், பகத்பாசில், வடிவேலு நடித்த மாரீசனும் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படங்களின் வசூல் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
குடும்பத்துல கணவன், மனைவி சண்டையைப் பற்றி தலைவன் தலைவி படத்துல எடுத்துருக்காங்க. இன்னொரு பக்கம் மாரீசன்ல பகத்பாசில், வடிவேலு நடிப்பில் படம் ஸ்லோவா போகுது.
தலைவன் தலைவி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. முழு படமும் கணவன், மனைவி சண்டைதான். ஆனால் அவர்களுக்குள்ள ஏகப்பட்ட அன்பு இருக்கும். ஒரு குடும்ப கதையை எங்கேயுமே தொய்வில்லாம கொண்டு போயிருக்காங்க. டைவர்ஸ் பண்ணனும்னு மனநிலையில் இருக்கிறவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் மாத்திப்பாங்க.
விஜய்சேதுபதி கேரக்டரே அப்படித்தான். அதனால தான் அவர் கத்திக்கிட்டே இருக்காரு. குடும்பக்கதையை ரொம்ப அழகா எடுக்கக்கூடியவர் பாண்டிராஜ்தான். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி அவர் சொன்னதை எல்லாம் கேட்டுருக்காரு. அதனாலதான் படம் இவ்ளோ சூப்பரா வந்துருக்கு.
மாரீசன் படத்துல வடிவேலுவுக்கு நடிப்பே இல்ல. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்காங்க. அவ்ளோதான். அதனால பெரிசா ஈரக்கல. மாரீசன் படத்துக்கு வசூலே மொத்தமா இந்தியாவுல 75 லட்சம்தான். ஆனா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரிய விலைக்கு வித்துட்டாங்க. அதை வாங்குனவரும் பெரிய விலைக்கு வித்துட்டாரு. அவங்களுக்கு லாபம்தான். ஆனா தியேட்டர் லெவல்ல நஷ்டம். லாபத்துல கொஞ்சம் நஷ்டம். அவ்ளோதான்.
பகத்பாசில் இன்டர்வியு கொடுத்து புரொமோஷன் பண்ணிருந்தா நல்லாருக்கும். வடிவேலு கொடுக்குறதே இல்லை. இந்த ரெண்டு பேரையும் தவிர படத்துல வேற யாருமே இல்லை. அதனால கூட படம் பெரிய அளவில ரீச் ஆகல. தலைவன் தலைவி படத்தோட வசூல் எப்படி இருக்குன்னா சமீபத்தில் வந்த ஏஸ் படம் லைஃப் டைம் பண்ணின வசூலை இது ஒரு நாள்ல பண்ணிருக்கு என்கிறார் அந்தனன்.
தலைவன் தலைவி முதல் நாள் இந்திய அளவில் நாலரை கோடியும், 2வது நாள் ஆறே முக்கால் கோடியும் என மொத்தம் 11.25 கோடியை வசூலித்துள்ளது.