விஜய்சேதுபதிக்கு இதெல்லாம் தேவையா? யோகிபாபுவை நம்பலாமா? தயாரிப்பாளர்தான் பாவம்!

By :  Sankaran
Published On 2025-05-25 15:54 IST   |   Updated On 2025-05-25 15:54:00 IST

சமீபத்தில் ஏஸ் படம் வெளியானது. இதில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். தயாரித்து திரைக்கதை எழுதி இயக்கியவர் ஆறுமுகக்குமார். மகாராஜாவின் வெற்றிக்குப் பிறகு வந்துள்ளது. ஆனால் இதற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. யோகிபாபு காமெடிக்காக ஒரு டிராக் மாதிரி வந்துட்டுப் போயிடுவாரு. ஆனா இந்தப் படத்தில் ஃபுல்லாவே விஜய்சேதுபதியோட வர்றாரு.

மொத்தத்தில் யோகிபாபுவை விஜய் சேதுபதி நம்பியது மிகப்பெரிய தவறு என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

விஜய்சேதுபதி உடன் படம் ஃபுல்லா யோகிபாபு வர்றாரு. அந்தக் கேரக்டரை சுமக்குற அளவுக்கு பலம் யோகிபாபுவிடம் இல்லை. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனமே காமெடிக்கு யோகிபாபுவை நம்பியது தான்.


காமெடி ஒர்க் அவுட் ஆகல. அந்தக் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தால் அதன் வேல்யுவே வேற. இந்தப் படத்துக்கு எங்கே சிக்கல் வந்ததுன்னா.. யோகிபாபுவால அந்தக் காமெடியைக் கரெக்டா பண்ண முடியலங்கறதுதான்.

விஜய்சேதுபதி மேல உள்ள விமர்சனம் என்னன்னா அவர் சினிமாவை பணம் சம்பாதிக் கிற ஏடிஎம் மெஷினாத்தான் பார்க்குறாரு. சினிமாவுக்காகத் தான் கோடம் பாக்கத்துல பலரும் பசி, பட்டினியோட அலையறாங்க. அந்த வகையில் சினிமாவுல வாய்ப்பு கிடைச் சிருக்குன்னா அதைப் பயன்படுத்தி திரைக்கலைஞனா அடுத்தடுத்த பரிணாமத்தைக் காட்டணும்.

அந்த எண்ணம் இல்லாம பணம் யாரு நிறைய தர்றாரோ அதை நாம நடிப்போம். அது எந்தக் கதையா இருந்தா என்ன? எந்த டைரக்டரா இருந்தா என்னன்னு நினைக்கி றாரோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. இந்தப் படத்தோட டைரக்டர் ஆறுமுகக்குமார். இவர் ஒரு பரிதாபத்துக்குரியவர்.

ஏற்கனவே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற ஒரு படத்தை பண்றாரு. அது நஷ்டமாகுது. அதுக்குப் பதிலாக இன்னொரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதி கொடுத்தாரு. அதுதான் இந்தப் படம். இதுவும் நஷ்டம் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.  

ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதி, யோகிபாபு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்தப் படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News