அஜித் லுக்குக்கு மாறிட்டாரே சியான் விக்ரம்!.. புது பட அப்டேட்டும் சொல்லிட்டாங்க!...
Vikram: ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சேது படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். இந்த படத்திலிருந்துதான் ரசிகர்கள் இவரை சியான் விக்ரம் என அழைத்தனர். அதன்பின் தில், தூள், சாமி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
அலட்டிக்கொள்ளாமல் ஒரு தனி ஸ்டைலில் நடிப்பது விக்ரமின் பாணி. அது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. சாமி படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பின் பல ஆக்சன் படங்களில் நடித்தார். ஒருபக்கம் காசி போன்ற படங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்துக்காட்டினார்.
அதேநேரம், கமலே பாராட்டும் சிறந்த நடிகராக இருந்தும் விக்ரமுக்கு சரியான படங்கள் அமையவில்லை. கடந்த பல வருடங்களாகவே அவருக்கு ஹிட் படம் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அதில் ஜெயம் ரவி உள்ளிட்ட சிலரும் நடித்திருந்தனர்.
விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தயாரிப்பாளர் செய்த தவறால் படம் தாமதமாக வெளியானது. அதுவே படத்தின் வெற்றியையும் பாதித்தது. படம் வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் விக்ரமின் புதுப்பட அப்டேட் வெளியாகாமல் இருந்தது. பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்தார்.
இந்நிலையில், 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளது. ஐசரி கணேஷுடன் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விக்ரம் நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. விக்ரம் இதுவரை இப்படி வெளியே வந்தது இல்லை. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.