‘கூலி’ படத்தில் அமீர்கானின் காட்சி இத்தனை நிமிடம்தானா? அதுக்கா இவ்ளோ அக்கப்போரு?

By :  Rohini
Published On 2025-06-14 19:06 IST   |   Updated On 2025-06-14 19:06:00 IST

ameerkhan

ரஜினி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ, விக்ரம் போன்ற படங்களில் வரிசையில் அடுத்து கூலி படமும் அமோக எதிர்பார்ப்பில் இருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் சத்யராஜ் ,சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட போஸ்டர்தான் இன்னும் வெளியாக வில்லை. மற்றபடி அனைத்து நடிகர்களின் கதாபாத்திரங்கள் போஸ்டர்கள் என ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. அமீர்கானின் கதாபாத்திரத்தை மட்டும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமீர்கான் அவர் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.அந்தப் படத்தின் புரோமோஷனில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அந்தப் படம் தமிழிலும் ரிலீஸாக இருக்கின்றது. அதனால் இங்கும் அந்தப் படத்தை பற்றி பேசி வருகிறார். அதோடு கூலி படத்தை பற்றியும் அவரிடம் கேள்விகள் கேட்டு வருகின்றனர். அதற்கும் சளைக்காமல் பதில் கொடுத்து வருகிறார் அமீர்கான்.

இதில் தான் அடுத்து லோகேஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார் அமீர்கான். இந்த விஷயத்தை சொன்னதிலிருந்து இந்த ஒரு செய்திதான் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே அமீர்கான் லோகேஷ் இணைந்து ஒரு படத்தை பண்ணப் போகிறார்கள் என்ற செய்தி வந்தாலும் அது வதந்தியாக இருக்கலாம் என நம்பப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது அமீர்கானே சொன்னபிறகு அவர்கள் இணையும் படம் எப்படிப்பட்ட கதை? என ஆராய ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் கூலி படத்தில் அமீர்கான் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளாராம். ஆனால் அவரும் காட்சி வெறும் 6 நிமிடங்கள்தான் என சொல்லப்படுகிறது. 6 நிமிட காட்சிக்கு எதுக்கு 10 நாள்கள் என நெட்டிசன்கள் வழக்கம்போல கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். 

Tags:    

Similar News