அந்தப் பெயரைக் கேட்டதும் டென்ஷனான தனுஷ்!.. கருங்காலி மாலை வேலை செய்யலபோலயே!..
நடிகர் தனுஷ் கௌதம் வாசுதேவ் மேனன் பெயரை சொன்னவுடன் எரிச்சல் அடைந்ததாக சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருக்கின்றார்.
நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள் மற்றொரு புறம் தனது இயக்கம் என்று நிற்கக் கூட நேரமில்லாமல் வேலை பார்த்து வருகின்றார் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் லைன்அப்:
தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து இயக்கத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இல்லாமல் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்:
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். தற்போது இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். ஸ்டைலிஷ் இயக்குனர் என்ற பெயரை பெற்றவர். பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பல சிக்கல்களைக் கடந்து வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. படம் முழுக்க முழுக்க வாய்ஸ்ஓவர், காலம் கடந்து ரிலீஸ் என சிக்கல்கள் இருந்ததால் பிளாப் ஆனது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கும் போது நடிகர் தனுஷ்கும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே சற்று முரண்பாடுகளும் இருந்து வந்து இருக்கின்றது.
சந்திக்க விரும்பாத தனுஷ்:
என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் கௌதம் வாசுதேவ் மேனுடன் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கும் நிலையில் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றார். இதனால் தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் அவர்களிடம் தனுசை பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.
அவரோ தனுஷிடம் இதை சொல்ல அந்த பெயரை என்னிடம் கூறாதீர்கள். எனக்கு எரிச்சலாக இருக்கின்றது என்று சட்டென்று கூறிவிட்டாராம். இதனை வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்து இருக்கின்றார். தனுஷ் கருங்காலி மாலை எல்லாம் போட்டு தற்போது சாந்தமாக இருப்பதால் பழசை எல்லாம் மறந்திருப்பார் என்ற நம்பிக்கையில் கௌதம் வாசுதேவ் மேனன் அவரை அணுகி இருப்பார் போல ஆனால் அந்த கருங்காலி மாலை கடைசியில் வேலை செய்யவில்லை என்று கிண்டலாக பகிர்ந்து இருக்கின்றார்.