ரசிகனை திட்டாத!.. உன்ன விட அவன் அறிவாளி!.. இயக்குனர்களுக்கு பாடம் எடுக்கும் பாலா!...

By :  Murugan
Update: 2024-12-29 04:58 GMT

bala

Director Bala: ஒரு இயக்குனருக்கும், ரசிகனுக்கும் இடையே இடைவெளி இருந்தால் அந்த படம் வெற்றியை பெறாது. இதுதான் பொதுவான இலக்கணம். எந்த அளவுக்கு ரசிகனின் மனநிலையை புரிந்துகொண்டு ஒரு இயக்குனர் படத்தை கொடுக்கிறாரோ அதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது.

இதை சில இயக்குனர்கள் சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தொடர் வெற்றியை கொடுப்பார்கள். ஒருகட்டத்தில் இந்த இயக்குனர் என்றால் நம்பி போகலாம் என ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள். கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சுந்தர் சி, இப்போது லோகேஷ் போன்ற சில இயக்குனர்கள் அப்படி இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இது ரசிகனுக்கு பிடிக்கும், இது ரசிகனுக்கு பிடிக்காது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரசிகனுக்கு புரியாத ஒரு விஷயத்தை சொல்வது, அல்லது புரியாதபடி சொல்வது என செய்துவிட்டு கடைசியில் ரசிகனை திட்டும் பல இயக்குனர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ஒரு படம் ஓடவில்லை எனில் இது என்னுடைய தவறுதான் என சில இயக்குனர்கள் மட்டுமே ஒப்புக்கொள்வார்கள். இந்தியன் 2 படம் ஓடாத போது ‘இவ்வளவு எதிர்மறையான விமர்சனத்தை படம் பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 3-யில் அதை சரி செய்வேன்’ என ஷங்கர் சொன்னார். அதுதான் முதிர்ச்சி. அதை விட்டுவிட்டு ரசிகனை திட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் பாலா ‘ரசிகனுக்கு பசி எனில் வாழைப்பழம் கொடுக்கலாம். அதை உரித்து சாப்பிட முடியாமல் கஷ்டப்படுப்பட்டால் உரித்து கொடுக்கலாம். ஆனால், ஊட்டி விடக்கூடாது. அது அவன் வேலை. இயக்குனர்கள் 15 படம் எடுப்பார்கள். ஆனால், ரசிகன் பல திரைப்படங்களை பார்ப்பவன். அவனுக்கு அறிவு அதிகம். அவனே சரியான விமர்சகன். அவனை மதிக்க வேண்டும். ‘நீ படத்தை எடு. பாக்குறது என் வேலை’ என்கிற ஆணவம் ரசிகனிடம் இருக்கும். அது தேவையும் கூட’ என சொல்லி இருக்கிறார்.

Tags:    

Similar News