ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!.. லோகேஷையே மெரள விட்ட மிஸ்டர் பாரத் புரமோ வீடியோ!..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கும் மிஸ்டர் பாரத் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்து ஹிட் படங்களை கொடுத்து மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என்கின்ற பெயரைப் பெற்று இருக்கின்றார்.
மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றது. நடிகர் சத்யராஜ் , நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சுருதிஹாசன் ஆகியோர் இந்த திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து பாலிவுட் பிரபலம் அமீர்கானும் இந்த திரைப்படத்தில் இணைந்து இருக்கின்றார். கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வருடம் மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்கின்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் கூலி திரைப்படம் பிளாக்பஸ்டர் தான் என்று ரசிகர்கள் பலரும் நம்பி வருகிறார்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களை இயக்குவதை தாண்டி படங்களை தயாரித்தும் வருகின்றார். அந்த வகையில் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் பென்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தயாரித்து வருகின்றார். இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு படத்தையும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கின்றார் .
இது முழுக்க முழுக்க அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படமாக உருவாக இருக்கின்றது. யூட்யூபில் பிரபல நடிகராக இருக்கும் பாரத் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கின்றார்.
இப்படத்தில் பாரத், நிரஞ்சன், நடிகை சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரோமோவை தற்போது லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ அட்டகாசமாக இருக்கின்றது. இதில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கின்றார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அறிமுக இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் ,அதிலும் யூடியூபில் குறும்படங்களை எடுத்து சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இது மிகப்பெரிய பாராட்டை பெற்று வருகின்றது.