அமரன் படம் எப்படி இருக்கு? வழக்கமான எஸ்கே. இல்லையாமே! பிரபலம் சொல்லும் புதுத்தகவல்
வழக்கமாக எஷ்.கே.படம்னாலே குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படம் எப்படின்னு பார்ப்போம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். முதன்முறையாக கமலுடன் இணைந்து கைகோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...
அமரன் படத்துக்கு முதல் தடவையாக புரொமஷனுக்கு அமெரிக்காவுக்குப் போறாங்க. அங்கே தான் கமல் சாரும் இருக்காரு. நிச்சயமா படத்துக்கு பெரிய புரொமோஷன் கொடுப்பாங்க.
கதைக்காக ரசிக்கிற கூட்டம் வந்துடுச்சு. இந்தப் படத்துக்கு ரொம்ப நெகிழ்வான கதையைக் கொடுத்திருக்காரு. சிவகார்த்திகேயனோட பிசினஸையும் தாண்டி இந்தப் படத்துக்கு பெரிய செலவு பண்ணிருக்காங்க. கிட்டத்தட்ட 120 கோடி வரை செலவு
பண்ணிருக்காங்க. சாய்பல்லவியோட கேரக்டர் ரொம்ப மேட்ச்சா இருக்கு. சிவகார்த்திகேயனின் படத்தோட வழக்கமான சாயல்ல இந்தப் படம் இருக்காது. முழுக்க முழுக்க சீரியஸான சிவகார்த்திகேயனைத் தான் பார்க்கப் போறாங்க.
அது தவிர காதலும் படத்துல வருது. 'யுஏ' மாதிரி தான் சான்றிதழ் கொடுத்ததா சொன்னாங்க. இந்த நிறுவனம் பயங்கர நம்பிக்கையோட இருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. கடைசியாக நடித்த சில படங்கள் சொதப்பி விட்டன.
அதிலும் சிவகார்த்திகேயனே பிரின்ஸ் படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறு. அது வேறொரு நடிகர் நடித்திருக்க வேண்டிய படம்னு சொல்லி வருத்தப்பட்டார். இப்போது விஜய் உடன் கோட் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
கமலுடன் கைகேகார்த்துள்ள படம் என்பதாலும் இதுல வித்தியாசமான சிவகார்த்திகேயனை நம்மால் பார்க்க முடியும் என்பதாலும் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. வரும் தீபாவளி அன்று படம் திரைக்கு வருகிறது. ஆடியோ லாஞ்ச் புரொமோஷனுக்கு அடுத்தபடியாக அடுத்தடுத்த புரொமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.