அந்த லக்கி வார்த்தையை சொல்லிட்டாரு… தக் லைஃப் மீது கமலுக்கு இவ்வளோ நம்பிக்கையா? ஆத்தாடி!
Thuglife: கமல்ஹாசனின் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 திரைக்கு வர இருக்கும் நிலையில் அப்படம் குறித்து ஏகப்பட்ட ஆச்சரியப்படும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் சொல்லி இருக்கும் சில சர்ப்ரைஸ் விஷயங்களும் வாவ் சொல்ல வைக்கிறது.
விக்ரம் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தில் கமல் நடித்த பிறகு அவருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. அதிலும் 90களில் சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பது வேற பரபரப்பை பத்த வைத்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லாமே புஸ்ஸென போனது. இதுவரை கமலின் திரைப்படம் விமர்சிக்கப்படாத வகையில் பெரிய அளவில் விமர்சனத்தினை குவித்தது. அப்படத்தினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. கடைசியாக கமல் தயாரிப்பில் வெளியான விக்ரம் மற்றும் அமரன் மாஸ் ஹிட் அடித்தது. இதனால் ராஜ்கமல் பிலிம்ஸுக்கு ஏகப்பட்ட வசூலும் கிடைத்தது.
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அமரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே விக்ரம் படத்தின் வசூலை வைத்தே அமரனை இயக்கினோம். இப்படம் வெற்றி ஆனாலும் இன்னும் ராஜ்கமலிடம் இருந்து படம் வரும் எனவும் பேசி இருந்தார். இந்நிலையில் இன்று தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்துள்ளது.
அதில் கமல்ஹாசன் பேசும்போது, நான் தக் லைஃபை விற்க வரவில்லை. நல்ல சினிமாவை விற்க வந்தேன். நல்ல சினிமா எடுத்தால் நீங்க எப்படியும் வாங்கிவிடுவீர்கள். எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது எனச் சொல்கிறேன். யாரும் சவால் விடுவதாக நினைக்க வேண்டாம்.
அவர்களின் விருப்பம் தான். நான் நெட்பிளிக்ஸ் மற்றும் டிவி உரிமையை மட்டுமே விற்று இருக்கிறேன். பாக்கி எல்லாம் நானும் மற்றும் மணிரத்னம் மட்டுமே விநியோகிக்க இருக்கிறோம். என்ன நம்பிக்கை இருந்தால் இப்படி செய்வார்கள்.
எங்களுக்கு ஓரளவு வியாபாரம் தெரியும். நல்ல சினிமாவை தயாரித்து முதலீடு போட்டு இருக்கிறோம். விதை போட்டு சினிமா விவசாயம் செய்திருக்கோம். அதில் யாராவது காண்டிராக்ட் விவசாயம் செய்யாம இருக்க மணி மாதிரி தோழர்கள் தேவைப்படுகிறார்கள்.
நீங்க இந்த படத்தினை ஆதரித்தால் அடுத்து நல்ல படம் எடுக்க என் கையில் வலு இருக்கும். நான் கட்சி நடத்துவதே என் பணத்தினை வைத்துதான். சினிமாவிற்கு கொஞ்சம், அரசியலுக்கு கொஞ்சம் என நடத்தி வருகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.