வனிதா அக்காவுக்கு ஆப்படிச்சிட்டாரே இளையராஜா!.. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டருக்கு வந்த சிக்கல்!...

By :  MURUGAN
Published On 2025-07-11 12:16 IST   |   Updated On 2025-07-11 12:51:00 IST

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்தி வருவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். இதற்கு முன் மஞ்சுமெல் பாய்ஸ், கூலி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் அவரின் பாடல்களை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தனது பாடல்களை பயன்படுத்த தன்னுடைய அனுமதி வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். சிலர் மட்டுமே அதை செய்கிறார்கள். பலரும் பாடல்களுக்கான உரிமையை வைத்திருக்கும் ஆடியோ நிறுவனங்களிடம் என்.ஓ.சி வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், படைப்புத்திறன் சொத்து அடிப்படையில் இளையராஜா உரிமை கோருகிறார்.

இதை சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இளையராஜா காசு ஆசை பிடித்தவர் என்பது போல சித்திரிக்கிறார்கள். ஆனால், தன்னுடைய பாடலை அனுமதி பெறாமல் வியாபார ரீதியாக பயன்படுத்தி காசு சம்பாதிப்பதை எதிர்த்தே இளையராஜா நீதிமன்றம் செல்கிறார்.


வனிதா விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை வனிதாவின் மகன் ஜோவிகா இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் வனிதாவே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷனை கடந்த சில நாட்களாகவே வனிதா செய்து வந்தார். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம் என செய்தியாளர்கள் வனிதாவும், அவரின் மகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த படம் இன்று காலை தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற தனது பாடல் இடம் பெற்றுள்ளதை எதிர்த்து இளையரஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு வருகிற 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags:    

Similar News