லிட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் உலக சூப்பர் ஸ்டார்!.. காம்பினேஷனே கலக்குதேங்க!..
இந்நிலையில் ஜாக்கி சான் சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.;
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
தக் லைஃப் படக் குழு மும்பை, ஹைதராபாத், கேரளா, கர்நாடகா என பல இடங்களுக்கு சென்று படத்தை ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். தக் லைஃப் படத்தின் ரிலிஸை தொடர்ந்து சிம்பு பல படங்களில் கமிட்டாகியுள்ளார். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள தனது 49வது படத்தில் நடித்து வருகிறார். அதில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க உள்ளார். மேலும், கதாநாயகான நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் நட்புக்காக இப்படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புகொண்டுள்ளார்.
அதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அஷ்வத் மாரிமுத்து என சில இயக்குநர்களுடன் பணியாற்றவுள்ளார். மேலும், மலையாளத்தில் 2018 என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த ஜூட் ஆண்டனி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜாக்கி சான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காமெடி கலந்த அக்ஷன் காட்சிகளாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரையும் கவர்ந்து உலக அளவில் புகழ் பெற்று திகழ்கிறார் ஜாக்கி சான். இந்நிலையில் ஜாக்கி சான் சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜாக்கி சான் நடித்த கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் படம் இந்த வாரம் மே 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சிம்பு படத்தில் அவர் நடிக்கும் தகவல்கள் கசிந்துள்ளன.