கடைசி படமானா கேட்டீங்க? ரஜினியின் லிஸ்ட்ட கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ஜெயிலர் 2 திரைப்படம் தான் ரஜினிக்கு கடைசி படமா என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அதற்கு லதா ரஜினிகாந்த் அப்படியெல்லாம் இல்லை. அவர் நடிப்பார் என மிகவும் கனிவாக சொல்லிவிட்டு போனார். ஆனால் உள்ளபடியே ரஜினி இன்னும் பத்து வருடம் ஓடுகிற குதிரையாக தான் இருக்கிறார்.
ஆனால் சினிமா துறையில் அவருடைய கடைசி படம் இதுதான் அதுதான் என ஒரு தகவல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. அதை வைத்து தான் லதா ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் அப்படி ஒரு கேள்வியை கேட்டனர். அவருடைய எனர்ஜி லெவலை பார்க்கும் பொழுது இன்னும் பல வருடம் அவர் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக தான் வருவார் என தெரிகிறது.
73 வயது உடையவர் மாதிரியா நடக்கிறார் பேசுகிறார். விமான நிலையத்தில் அவர் நடந்து வரும் பொழுது ஓடி வருகிறாரா இல்லை நடந்து வருகிறாரா என்றே தெரியவில்லை. அவருடைய நடையில் உள்ள வேகம் சுறுசுறுப்பு என இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக இன்னும் பல வருடம் இருப்பார் என சந்தேகமில்லாமல் சொல்லி விட முடியும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சினிமா துறையே அவர் மீது ஒரு பெரிய நம்பிக்கையை வைத்துக் கொண்டே இருக்கிறது.
அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. தயாரிப்பாளர் தாணு நீண்ட காலமாக அவரிடம் படம் பண்ணலாம் என கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே தாணு தயாரிப்பில் கபாலி என ரஜினி நடித்தாலும் இன்னும் அடுத்து ஒரு படம் கால்ஷீட் கொடுப்பாரா என தாணுவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தாணுவின் மகன் பரந்தாமன் அந்த ஒரு முயற்சியை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
rajini
அடிக்கடி ரஜினியை பார்த்துவிட்டு வருகிறாராம் .இன்னொரு பக்கம் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம். இவர்களுடன் பஞ்சு சுப்புவும் ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணும் முடிவில் அவரை முயற்சி செய்து வருவதாகவும் தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரை சுற்றி வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஜெயிலர் 2 திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி அடுத்து யாருடன் இணையப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.